நட்பு

நண்பர்கள் என்போர்
இருவரும் ஆணாய்
அல்லது இருவரும் பெண்ணாய்
இவ்வளவு ஏன்
ஒருவர் ஆண்,மற்றவர்
பெண்ணாயும் இருந்திடலாம்
அவர்கள் இணைப்பில்
வருவதுதான் நட்பு
நட்பை அஃறிணையாக்கிவிட
முடியாது , இலக்கணத்தில்
அது அப்படியானாலும்
நட்பில் இயங்கும் நண்பர்களை
நோக்குகையில் நட்பின்
உயிரோட்டம் கண்ணுக்கு தெரிகிறதே
தென்றல் தொட காதலர் காணும்
உணர்ச்சிபோல் -நட்பை
ஆண்பால் என்பதா இல்லை
பெண்பால் என்பதா
முடிவைக் இக்கவிதையைப் படித்தபின்
வாசகரே நீங்களே கூறுங்களேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Jul-18, 9:09 am)
Tanglish : nambu
பார்வை : 799

மேலே