புத்தாண்டு வாழ்த்து 2018
பனித்துளி வெண் பூக்களாய் பொழிய
குயில்களின் குதூகல இன்னிசை ஒலிக்க
தோகை விரித்தாடும் மயில்களின் மனதோடு
மனம் சில்லென்று சிறகடிக்க
உறவோடும்,நட்போடும் புதிய ஆண்டினை
உலகில் அன்பெனும் ஒளி வீசவேண்டுமென
இறைவனை இறைந்து பொலிவுடன் வரவேற்போம் .