தனஜெயன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  தனஜெயன்
இடம்:  பாண்டிச்சேரி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Jan-2017
பார்த்தவர்கள்:  517
புள்ளி:  143

என்னைப் பற்றி...

தமிழ் இலக்கியத்தின் மேல் அன்பும் அக்கறையும் கொண்டவன் தமிழுக்காவும் தமிழனுக்காவும் குரல் கொடுக்க கடமைபட்டிருக்கிறேன்.நான் lankgasripoem.com,eluthu.com,tamilpratilipi.com மற்றும் danajeane.blogspot.com ல் எழுதி வருகிறேன்.நான் தற்போது" சமுதாய பார்வைகள்" என்ற கவிதைநூலை எழுதி வெளியிட இருக்கிறேன்.அவை விரைவில் மின்நூலாக பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.ஒரு சில மின்இதழ்கள்நூலில் எழுதஆர்வம் அதற்கான வேலையில் தீவிரம் காட்டி வருகிறேன்.என்னுடன் தங்கள் கருத்துகளை பகிருங்கள்.கற்றுக்கொள்ள ஆவலாக உள்ளேன் தமிழ் இலக்கியமே என் மூச்சாக கருதுகிறேன்.நான் அடிப்படையில் முதுநிலை உயிர்வேதியல் பட்டதாரி.எழுத்து துறை எனக்கு பிடித்தமானவை,கவிதையில் ஆரம்பித்து கதை,நாவல் மற்றும் கட்டுரை,புதினங்கள் என எல்லை ஓடுகிறது..

என் படைப்புகள்
தனஜெயன் செய்திகள்
தனஜெயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2018 3:08 pm

கவிசக்ரவர்த்தியே
உன் புகழ் பாட
எனக்கு எந்த தயக்கமும் இல்லை!
புகழ் மிகு புதுவையில்
கலையரங்கத்தையே ஆட்கொண்டாய்!
நம் இனத்தில் கற்பனை வளத்தாலே
நடைபோட்டாய்!
கவிஞர்கள் மனதில்
உன் தறியாலே இசைக்கிறாய்!
தமிழ் முழுவதும் அமுதமாய்
நனைகிறாய்!
தமிழோ உன் வெண்பால்
துளிர்க்கிறது!
அதை படித்த என்மனம் தேன்போல் இனிக்கிறது!
கம்பராமயனம்
இதிகாசங்கள் அல்ல
ஒரு நாட்டின் விதிகாசங்கள்!
நீ கவிஞனாய் கதலிக்கிறாய்
நான் உன்னை அறிஞனாய் ஆர்பரிக்கிறேன்!
பூவை நீ கண்டபோது பாவையானது!
பாவை உன் அருகில் வர காதலானது!
தாசியை காதலித்த நீயே கவிஞன்!
பெண்மையை ரசித்திருக்கிறாய்!
உண்மையாய் நினைத்திருக்கிறாய்!
காதலித்த

மேலும்

தனஜெயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2018 3:04 pm

உன் தோகைக்கு
எத்தனை பாகை!
கணிதமேதையே கலங்கடிப்பாய்
காலை நேரத்தில் இன்பராகமாய்
சிறகொடிப்பாய்
முருகனின் வாகனமாய்
வலம் வந்ததை பார்த்ததில்லை!
உன் இறகுகள் காதலியை
வருடும் இதத்தை பார்த்திருக்கிறேன்.
என்னுடைய பள்ளிக்காலத்தில்
புத்தகத்தில் சுமேந்தேன்
உன் இறகை
அப்படியே அதே அழகுடன் நீ.
வனங்கள் அழிந்து வருவதால்
உன் அழகுக்கும் ஆபத்து வரும்
உனைகாத்து கொள்.

மேலும்

தனஜெயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2018 2:52 pm

தடாகத்தின் அரசியே
உன் இதழ்களால் நீரில் இசைக்கிறாய்
என் கண்களை இன்பாமாய் ரசிக்கிறாய்

ஒரு மலரில் ஓராயிரம்
கதைகள்
உன் இலைக்கு
நீரின் மேல் காதல்
தாமரைக்கோ
தலைவன் மேல் காதல்
நீர் இல்லாமல் நீ இல்லை
நீ இல்லாமல் நான் இல்லை
என ஒரு தெய்வத்தின் குரல்.

பலாசுளை இதழ்ளால்
இளசுகளின் இதழையே தோற்கடித்தாய்!
உன் இதழை நான் சுவைத்தேன்
இமைகள் சொருக
நிமிர்நது நின்றேன்.
அழுத்தம் குறைக்கும்
அறுமருந்தே
ஆளில்லா முறைக்கும்
அணிவகுப்பே!
தடாகத்தில் நான் வீழ்ந்தேன்
உன்னை கட்டியணைக்க.
சேற்றோடு என் உடல்
பொலிவோடு உன் மடல்.
என் கவிதை ஆரம்பமானது!

மேலும்

தனஜெயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2018 2:41 pm

உங்களின் கோட்பாடுகள்
கொள்கைகள் இவற்றிலிருந்து
வெளியே வரமுடிந்தால் இயற்க்கையை ரசிக்கலாம்.

நம்மை சுற்றி
உயிரோட்டம் நிரம்பிய
கோள்தான் பூமி
இதில் நாம் பிறந்ததே ரசிக்கத்தான்.
நீ ரசிக்கலாம்
குறைகூறலாம்
வேதாந்தம் பாடலாம்
சிந்தாந்தம் எழுதலாம்
உன்னை கட்டி அணைக்கப்பது
முதலில் பெண்
இறுதியில் மண்
இரண்டும் அமைதியின் வழிபாடு

பணக்காரன் ஏழை என்ற வேறுபட்ட
அழுகுரல்கள் மனதிற்க்கு மட்டும்தான்
மண்ணுக்கு கிடையாது.
கொஞ்சம் சிரிப்போம் நிறைய ரசிப்போம்.
அப்படியே இயற்க்கையை காப்போம்.
ஏன்?
மனிதனை புதைக்க
மாசு இல்லாத மண்ணை தயார்செய்ய
நிறுவனங்கள் காத்து கிடக்கிறது!

எழுத்தாளர் சிவசக்தி

மேலும்

தனஜெயன் - தனஜெயன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2017 8:06 am

நினைத்தால் தவறில்லை
மறக்கவும் முடியவில்லை
உன் முகம் பார்த்தே பழகியவன் வேறு மனம் நாடவில்லை
மனம் உடைக்காதே
அதில் நீதான் வாழ்கிறாய் புறகணிக்காதே
என் உடலில் நீதான்
சுவாசிக்கிறாய்
என் அன்பே
என் உயிரில் நீ உறங்கு
என் உயிரே....

மேலும்

நன்றி நண்பர் சேகர் அவர்களே.தவறில்லை பயன்படுத்தி கொள்ளட்டும்.இது வழக்கமான ஒன்றுதான்.ஆனால் அவரால் தொடரமுடியாது.நம்மால் முடியும்.நன்றி! 07-Sep-2018 10:04 am
உங்கள் கவிதைகள் அருமை, உங்கள் கவிதைகளை சிலர் திருடி தன் கவிதை என்று கூறுகிறார்கள், சண்டையிட்டும் பயனில்லை 06-Sep-2018 11:14 am
தனஜெயன் - தனஜெயன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Sep-2017 11:22 pm

சாமி யார்?

துறுவு அறம் பெற்றேன்
ஜீவ ஒளியை தேடி நான்
குடும்பம் துறந்தேன்
உலக இன்பம் மறந்தேன்
மக்கள் வாழ நினைத்தேன்
தற்கால கார்பேரட்
சாமி அல்ல நான்
கற்கால காவியாக நான்

மானுட வாழ்வு
ஒளிபெற பயணம்
என் கால் தடத்தில்
அன்பை விட்டு செல்வேன்
மனிதனில் அன்பை மட்டும்
விதைப்பேன்
உலகம் அமைதி
ஒளி பெறட்டும்

அடி எடுத்து வைக்கிறேன்
தொடராதீர்கள் என்னை
நானும் மனிதன் தான்
உங்களை போல சுவாக்கிறேன்!

மேலும்

நன்றி நண்பா ! 20-Sep-2017 12:54 pm
மனிதர்கள் நல்லவர்களாக வாழ முடியும் ஆனால் அதிலும் முழுமையடைய நீண்ட காலம் எடுக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Sep-2017 11:41 am
தனஜெயன் - தனஜெயன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jun-2017 7:06 pm

நீ நானாகி
நாம் யாராகி?
இதயம் ஒன்றாகி
இருந்தும் இசையாகி
மனது நன்றாகி
மணமுள்ள பூவாகி
சுவாசம் ஒன்றாகி
சுதந்திரம் என்றாகி
வாழ்வில் கடலாகி
நீ அதில் அலையாகி..

கண்களில் அமைதியாகி
காதல் என்றாகி
என் உடல் உறுதியாகி
அதில் நீ மல்லிகை கொடியாகி
நாணத்தில் நின்றாடி நளினத்தில்
எனை மூடி..

வானத்தில் வசந்தமாடி வருகையில்
வான் நிலவாகி என் மனதில் அழகாடி
நீ என்றும் உறவாடி
உண்மையில் ஊற்றாடி உறங்காமல்
என் விழி உனைதேடி..

உன் பார்வையின் தரிசனம்
நான் தேடி
தினம் விழித்தெழுவேன்
உன் முன்னாடி
நீயாகி நான் நிற்கும்போது நிலவாகி
நான் நீயாகிபோகும் போது கதிரவனாகி
கலங்கரை விளக்கமாகி
காத

மேலும்

நன்றிகள் பல வார்த்தைகள் சில.. 18-Jun-2017 12:27 am
அருமையான படைப்பு, வாழ்த்துக்கள்... 17-Jun-2017 6:41 pm
தனஜெயன் - தனஜெயன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-May-2017 12:40 am

பத்துமாதம் நீ சுமந்து
பனிக்கூடம் உடைக்கையிலே
பிஞ்சு மனம் கொஞ்சுதம்மா..

மேலும்

சிந்திக்க ..... நன்றி நண்பா ,,,,,,,,,,, 31-May-2017 12:25 pm
பனிக்கூடம் உடைக்கையிலே பிஞ்சு மனம் கொஞ்சுதம்மா.. -----என்ன பொருள் ? பனிக் கூடம் என்றால் ? அன்புடன்,கவின் சாரலன் 31-May-2017 8:52 am
என் விழியோரம் கண்ணீரின் வானிலை 30-May-2017 7:20 pm
தனஜெயன் - தனஜெயன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-May-2017 9:01 am

மனித மனதில் இந்த எண்ணங்கள்
முளைத்த தருணங்கள் துக்கம்
துளிர்விட்டது
தூய உயிர் துயில் கொள்ளும் வேலையில் மண் தான் தின்றது
பழைமையில்..

புதுமையில் அதிகார வர்க்கம்
முதலாம் உலகப் போரில் தின்றது
மனிதனால் இது தொடர்ந்து இராண்டாம் உலகப்போரில் ஒருவானால் தின்னப்பட்டது
பல லட்டசம் உயிர்கள்..

பிணம் தின்னும் சாத்திரம் நம் கண்ணில் அங்காங்கே கண்டங்களில்
சரித்திரமாய் வளர்ந்து வந்தது
சிங்களன் தமிழனை தின்ற நிலை
மறந்து போகுமா
எத்தனை எரிமலை உறங்கி நிற்கிறது தெரியுமா கழுகை பார்த்து..

மனிதா வாழ்நாள் கொஞ்சம் தானடா
மனிதனை விழுங்க உனக்கு எத்தனை மடமையடா
உரிமையை மறுத்து உயிரை தின்னும் நிகழ்வா பெரிது.

மேலும்

தனஜெயன் - தனஜெயன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2017 9:05 am

ஆண் பலத்திற்க்கு முதல்வன்
பாசத்திற்கு பதிவு அவன்
காதலிக்காக ஓய்வில்லாமல்
ஓடும் அலை அவன்..

காதலில் பல மடங்கு அன்பை வீசும்
மழை அவன்
சமூக அவலங்களை எதிர்க்கும்
தீ அவன்..

இதயத்தையும் உயிரையும் காதலிக்கு  கொடுத்தவன்
பல யுகங்களுக்கு முன்பபே
பத்திர பதிவு செய்தவன்
ஒலைசுவடி முதல் எலக்ட்ரானிக் மெயில் வரை..

குடும்பத்திற்காக தன் உடலை
ஒய்வில்லாமல் கொடுத்தவன்
குழந்தைகளுக்கு முழு அன்பு அவன்
பெற்றவர்களுக்கு கடமை அவன்.

அன்பில் வான் அளவு உயர்ந்தவன்
உழைப்பில் தேய்ந்தவன்
உண்மையில் நல்லவன்
பெண்களுக்கு பிடித்தவன்..

மேலும்

நன்றி! நன்றி! நண்பரே..... 30-May-2017 11:19 pm
சில உணர்தல்களை எழுதி உள்ளீர்..,இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-May-2017 7:21 pm
நன்றி! நண்பரே .............. 26-May-2017 1:25 pm
அருமை! 26-May-2017 9:20 am
தனஜெயன் - தனஜெயன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Apr-2017 8:02 am

உன் உதட்டில்
ஓராயிரம்
தாமரை இதழ்கள்
பறிக்க நினைக்க
வில்லை..

நிலவே
உன் வெளிச்சத்தில்
ரசித்து விரும்புவேன்
உன்னை..

என் உதடு
உன்னை வரவேற்க்க
காத்திருக்கும்
இதயமாய் நான்..

மேலும்

தனஜெயன் - தனஜெயன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Apr-2017 8:50 am

அவள் அழகுடன்
சுற்றியுள்ள
இயற்க்கை
செயற்ககை
அனைத்தும் தோற்க்கும்..

போர்படைகள்
உன்னை சிறை எடுக்க
திரண்டு வந்தால்
நீளமான கூந்தல்
நின்று வீசும்..

உன் பார்வையால்
வீரனும் மண்டியிட
விரலின் அழகில்
தளபதி தலைகுனிய..

போர் நடக்காமல்
உன்னை பார்த்த கண்கள்
விழி மூடாமல்
போர்படைகள் அவள் அழகில்..

மன்னனுக்கு செய்தி
தொடர
போர்படை
தோல்வி என
மன்னன் கோபத்தில்
போர்களம் காண!

அவள் முழு அழகில்
நாட்டை எழுத
அழகுப் பெண் சொன்னாள்
நாடு வேண்டாம்
என் காதலன் வருவான்
என..

வருவான் அவள் அழகை
கொள்ளை கொண்டவன்
அன்பை ஆளப்பிறந்தவன்
அவளுக்கா !
உயிர் அல்ல
ஒவ்வொரு அணுவையும்
அப்பேடியே

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
user photo

மன்சூர்

பாண்டிச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (15)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
தம்பு

தம்பு

UnitedKingdom
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (15)

மேலே