தாமரையே

தடாகத்தின் அரசியே
உன் இதழ்களால் நீரில் இசைக்கிறாய்
என் கண்களை இன்பாமாய் ரசிக்கிறாய்

ஒரு மலரில் ஓராயிரம்
கதைகள்
உன் இலைக்கு
நீரின் மேல் காதல்
தாமரைக்கோ
தலைவன் மேல் காதல்
நீர் இல்லாமல் நீ இல்லை
நீ இல்லாமல் நான் இல்லை
என ஒரு தெய்வத்தின் குரல்.

பலாசுளை இதழ்ளால்
இளசுகளின் இதழையே தோற்கடித்தாய்!
உன் இதழை நான் சுவைத்தேன்
இமைகள் சொருக
நிமிர்நது நின்றேன்.
அழுத்தம் குறைக்கும்
அறுமருந்தே
ஆளில்லா முறைக்கும்
அணிவகுப்பே!
தடாகத்தில் நான் வீழ்ந்தேன்
உன்னை கட்டியணைக்க.
சேற்றோடு என் உடல்
பொலிவோடு உன் மடல்.
என் கவிதை ஆரம்பமானது!

எழுதியவர் : சிவசக்தி (7-Sep-18, 2:52 pm)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : thamaraiye
பார்வை : 133

மேலே