நான் நீயாகி
நீ நானாகி
நாம் யாராகி?
இதயம் ஒன்றாகி
இருந்தும் இசையாகி
மனது நன்றாகி
மணமுள்ள பூவாகி
சுவாசம் ஒன்றாகி
சுதந்திரம் என்றாகி
வாழ்வில் கடலாகி
நீ அதில் அலையாகி..
கண்களில் அமைதியாகி
காதல் என்றாகி
என் உடல் உறுதியாகி
அதில் நீ மல்லிகை கொடியாகி
நாணத்தில் நின்றாடி நளினத்தில்
எனை மூடி..
வானத்தில் வசந்தமாடி வருகையில்
வான் நிலவாகி என் மனதில் அழகாடி
நீ என்றும் உறவாடி
உண்மையில் ஊற்றாடி உறங்காமல்
என் விழி உனைதேடி..
உன் பார்வையின் தரிசனம்
நான் தேடி
தினம் விழித்தெழுவேன்
உன் முன்னாடி
நீயாகி நான் நிற்கும்போது நிலவாகி
நான் நீயாகிபோகும் போது கதிரவனாகி
கலங்கரை விளக்கமாகி
காதலர்கள் நம்மை
தேடி வரும் இன்பமாகி
நம்காதல் பயணம் இந்த மண்ணில்
வரும் நேரமாகி
நான் நீயாகி..