கம்பன்

கவிசக்ரவர்த்தியே
உன் புகழ் பாட
எனக்கு எந்த தயக்கமும் இல்லை!
புகழ் மிகு புதுவையில்
கலையரங்கத்தையே ஆட்கொண்டாய்!
நம் இனத்தில் கற்பனை வளத்தாலே
நடைபோட்டாய்!
கவிஞர்கள் மனதில்
உன் தறியாலே இசைக்கிறாய்!
தமிழ் முழுவதும் அமுதமாய்
நனைகிறாய்!
தமிழோ உன் வெண்பால்
துளிர்க்கிறது!
அதை படித்த என்மனம் தேன்போல் இனிக்கிறது!
கம்பராமயனம்
இதிகாசங்கள் அல்ல
ஒரு நாட்டின் விதிகாசங்கள்!
நீ கவிஞனாய் கதலிக்கிறாய்
நான் உன்னை அறிஞனாய் ஆர்பரிக்கிறேன்!
பூவை நீ கண்டபோது பாவையானது!
பாவை உன் அருகில் வர காதலானது!
தாசியை காதலித்த நீயே கவிஞன்!
பெண்மையை ரசித்திருக்கிறாய்!
உண்மையாய் நினைத்திருக்கிறாய்!
காதலித்த கணமே வாழ்ந்திருக்கிறாய்!
கம்பா உன் பெயர் காரணம் பல வரலாம்!
கம்பங்க கொல்லையில் பறவையோடு பாடியிருக்கிறாய்!
உன் மரபில் வந்த காளியை
புகழ்ந்திருக்கிறாய்!
புலவரே உன் வாழ்நாளில் கவிபுனைந்தாய்!
என் வாழ்நாளில் உன் கவிமலரை நுகர்ந்துபார்த்தேன்!
அந்த மனத்தில் மயங்கி விழப்பார்த்தேன்!
கம்பா கவித்தேன் வடித்தவன் நீ
அதில் மலைத்தேன் கண்டவன் நான்!
உன் கவியில் மலை போல் நீன்றவன் நீ!
வற்றாத உன் கவிஆறு
எங்கள் படிப்புக்கு பெறும் பேறு!
உன் கவிசிந்தனை
இந்த புவிக்கே சிந்தனை !
இதிகாசத்தில் இசைத்த நீ
கவிஞர்களின் இல்லத்திலும் ரசிக்கிறாய்!
உன்னை பாடத கவிஞன் இல்லை
உன்னை தேடதவன் கவிஞனே இல்லை!
கற்பனை ரசம் கண்டவன் நீ!
கற்பில் உயர்ந்த ரசனை பொருத்தியவன் நீ !
நீதியை கற்று தந்தவன் நீ
மீதியையும் பெற்று தந்தவன் நீ!
தமிழின் இலக்கணமே
எங்களுக்கு இல்லை தலைக்கணமே!
கம்பனே கவிதையின் தலைவன்
காப்பியத்தில் முதல்வன்!
கம்பனின் கவிஆறில் பயணிக்கலாம்
கரையில்லாத கம்பனே
உன் கற்பனை ஆற்றில்
இடம் தேடுகிறேன்!
உன் ஆற்றலில் தொலைந்து போனேன்!
நான் கவிபாட நினைக்கிறேன்
சற்று எனை கைபிடித்து கூட்டிசெல்!
உன் கை பட்டவுடன் எனை மறந்தேன்!
நான் கவிபாடுவதை விட உன்கடலில் பயணப்படுவேன்
உன் விரலின் உணர்வோடு.!

−சிவசக்தி,புதுவை

எழுதியவர் : சிவசக்தி (7-Sep-18, 3:08 pm)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : kamban
பார்வை : 148

மேலே