மண் மேல் காதல்

உங்களின் கோட்பாடுகள்
கொள்கைகள் இவற்றிலிருந்து
வெளியே வரமுடிந்தால் இயற்க்கையை ரசிக்கலாம்.

நம்மை சுற்றி
உயிரோட்டம் நிரம்பிய
கோள்தான் பூமி
இதில் நாம் பிறந்ததே ரசிக்கத்தான்.
நீ ரசிக்கலாம்
குறைகூறலாம்
வேதாந்தம் பாடலாம்
சிந்தாந்தம் எழுதலாம்
உன்னை கட்டி அணைக்கப்பது
முதலில் பெண்
இறுதியில் மண்
இரண்டும் அமைதியின் வழிபாடு

பணக்காரன் ஏழை என்ற வேறுபட்ட
அழுகுரல்கள் மனதிற்க்கு மட்டும்தான்
மண்ணுக்கு கிடையாது.
கொஞ்சம் சிரிப்போம் நிறைய ரசிப்போம்.
அப்படியே இயற்க்கையை காப்போம்.
ஏன்?
மனிதனை புதைக்க
மாசு இல்லாத மண்ணை தயார்செய்ய
நிறுவனங்கள் காத்து கிடக்கிறது!

எழுத்தாளர் சிவசக்தி

எழுதியவர் : சிவசத்தி (7-Sep-18, 2:41 pm)
சேர்த்தது : தனஜெயன்
பார்வை : 140

மேலே