கார்த்திக்- கருத்துகள்

மொழிப்புலமையை மெருகேற்ற
சிந்தனையை செம்மைப்படுத்த
செயலாக்க தன்மையை அதன் ஆதங்கத்தை தணிக்கும் இன்னொரு வழி இந்த மொழி
ஆகையால் எழுதுகிறோம் ....மொத்தத்தில் ஆசை அறிவுக்கு இன்னொரு வடிகால் ...நன்றி அய்யா

1 . கண்டிப்பாக அரசியல் இருக்கிறது ஆனால் நாம் எண்ணுவது போல சாதாரண உள்நாட்டு அரசியல் அல்ல ...அது உலக அரசியல் .
2 . பீட்டா அமைப்பு ஒரு கைக்கூலி அவ்வளவே ....அவனுக்கு மேல் ஒருவன் இருக்கிறான் என்பதை ஆராய வேண்டும் ...அவன்தான் இந்த விஷயத்துக்கு மட்டும் அல்லாமல் பல விஷயத்துக்கும் இனி வரும் பிரச்சனைகளுக்கும் கூட காரணம் ...இது வியாபார ரீதியான போர் ஒரு வணிக போர் ...அதில் நாம் ஏல்லோருமே பலியாடுகள் ,இப்போது அல்ல பல ஆண்டுகளாக இப்படித்தான் அவர்களின் அரசியல் சூட்சமம் நடந்து வருகிறது ....சற்று யோசித்து பாருங்கள் நமது நாட்டு பரமபரியத்தை நம்மிடமே திருடி நம்மிடமே மாற்று பெயரில் விற்கிறான் இதுதான் வணிகப்போரின் உச்சம் ....ஒரு டூத்பேஸ்ட்டில் கூட அவர்கள் முரட்டுத்தனமான வணிக அரசியல் இருக்கிறது ....இதில் மாதவாதம் .இனவாதம் எல்லாமே அவர்கள் மறைந்துள்ள போர்வைகள் பசுத்தோல் போர்த்திய புலி என்பார்களே அதுபோல ....நம் நாட்டு பிரிவினைவாதத்தில்தான் அவர்களின் அரசியலே நிகழ்கிறது ....சிரியா வின் போர் எதற்காக என்று ஆராய்ந்து பாருங்கள் நண்பரே ...அதே கதைதான் இங்கும் நம் மண்ணிலும் நடக்கிறது வேற்று வழியில் ....
3 . ஆம் இது ஒரு வழிமுறைதான் ....வருடத்திற்கு தோராயமாக இரண்டு லட்சம் மாடுகள் இறைச்சிக்காக வேற்று நாடுகளுக்கு அனுப்பி வைக்க படுகிறது இதில் இந்தியா இரண்டாவது இடம் என்பது கொடிய உண்மை .....இதில் எங்கு இவர்கள் மத அரசியல் பேசமுடியும் சற்று யோசித்து பாருங்கள் ....அத்தனை அரசியல் வாதிகளும் சாவி கொடுத்த பொம்மைகள் அந்த சாவியை யார் கொடுக்கிறார்கள் என்பதை நாம் பார்ப்பதில்லை அதில்தான் நாம் பிரிவினை வாதம் தலை தூக்கி ஆடுகிறது


சர்பான் இது குறித்து பேச நிறைய இருக்கிறது ...காரணம் சொல்லட்டுமா இது இப்போது தொடங்கியது அல்ல 17 ஆம் நூற்றாண்டில் துவங்கப்பட்டது அன்றிலிருந்து அவர்கள் பல கொலைகள் ,பல உள்நாட்டு சண்டைகள் ,என்று நடத்தி இன்று மூன்றாம் உலகப்போருக்கு திட்டம் போட்டுள்ளனர் அது தான் அவர்களின் திட்டம் ....கிட்டத்தட்ட தனிஒருவன் படம் போல்தான் அன்பரே அவர்களின் ஒரே நோக்கம் உலகை மொத்தமாக ஆள்வது ...."one world order " இதுதான் மொத்த திட்டம்

உள்ளூர் முதல் உலக அரசியல் , வெளிநாட்டு வியாபாரம் மட்டுமே காரணம்

இயற்கை (விலை கொடுத்து வாங்கவும் முடியாது ,தப்பிக்கவும் முடியாது,மாற்றவும் முடியாது )

இதற்க்கு தீர்வு என்பது ஒற்றுமையோடு விழித்தெழுவதில்தான் இருக்கிறது ...போராட்டம் என்பதெல்லாம் இன்றைய நாட்களில் வேளைக்கு ஆகாது .....நமது இந்திய சுதந்திரமே ஒரு கபட நாடகம் தான் ...காரணம் இந்தியாவின் மரபுகளை அழித்தபின்பே சுதந்திரம் என்பது போல் ஒன்றை கொடுத்தனர் அந்த சுதந்திரத்தால் பெயரை மாற்றிக்கொண்டோம் ...கிழக்கிந்திய கம்பெனி இன்று ஹிந்துஸ்தான் யூனிலீவர் (hindustan unilever ltd )லிமிடெட் என்று பெயரை மாற்றினோமே தவிர அதன் உரிமையாளர் இன்றும் கிழக்கிந்திய கம்பெனியை சார்ந்தவர்கள்தான் இது எத்தனை பேருக்கு தெரியும் ...இன்றும் அவர்கள்தான் நம்மை ஆள்கின்றனர் .....பெயர்ப்பலகை மட்டும் நமது இந்திய பெயர்களில் அவ்வளவே ....

இதற்க்கு தீர்வு பற்றி கேட்கிறீர்கள் ...இதற்கு தீர்வு தற்சார்பு வாழ்க்கை வாழ்வதுதான் அன்பரே ....எல்லோரும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளவேண்டும் அதாவது அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் அறிவுநிலை அடைவது ஒன்றே தீர்வு ....

இன்னும் இது குறித்து ஆராய வேண்டும் தோழமையே எல்லோருமே ஆராய வேண்டும் ...மிக்க நன்றி புரிந்துகொண்ட வினா எழுப்பியமைக்கு .

இளைஞர்கள் அரசியலுக்கு வருவது இன்றைய காலகட்டத்தில் தவறா? சரியா ? என்றால் ....அது வருபவரின் புத்திக்கூர்மையை பொறுத்து இருக்கிறது ....அரசியல் சாக்கடை என்பது ஒருபுறம் இருக்க அதை தூர்வார யார் வருவார்கள் என்ற ஏக்கம் எல்லோர் மனதிலும் இருக்கவே செய்யும் ....அதற்கு இளைஞர்களை இப்போது இழுக்கலாமா ....ஒரு உண்மையை சொல்ல வேண்டுமானால் ,இளைஞர்கள் நினைத்தால் எல்லாம் அரசியல் பிரவேசம் சாத்தியமில்லை காரணம் அரசியல் ஒரு வியாபாரபண்ணையாக மாறி பல காலம் ஆகிவிட்டது ....எதற்குஎடுத்தாலும் காசு ,பணம் என்றுதான் அவர்களின் நினைப்பு உண்மையில் அவ்வாறு நினைக்க வைக்க படுகிறார்கள் ,மக்களுக்கு நன்மை செய்ய இயலாதவாறு மந்தமாக்க படுகிறார்கள் ....

கொஞ்சம் யோசித்து பாருங்கள் அப்துல்கலாம் அய்யா நினைத்தால் முடியாததா ,அவரை ஜனாதிபதியாக்கியதே அவரின் செயலை மந்தமாக்க தான் ...இன்று யார் நினைத்தாலும் நடவாது, நாட்டை திருத்த ...தனிமனிதன் உண்மையை உணர்வதில் மட்டுமே இனி நாடும் உலகமும் வீழ்ச்சியடையாமல் இருப்பதில் உள்ளது ...ஒருபுறம் மீடியா நம்மை மழுங்கவைக்கிறது ,இன்னொருபுறம் நமது கல்விஅமைப்பு ....இவ்வாறு நாம் மழுங்கடிக்கப்பட்ட சமூகமாகவே வளர்கிறோம் நமது புத்திக்கூர்மையை மொட்டையாக்கி நம்மை நோய்வாய் பட்ட சமூகமாக மாற்றி வருகிறது.....புரிந்து கொள்ள கடினம்தான் தோழா காரணம் இது உலக அரசியல் .... உலக சமாதானம் ஒன்றை இயற்றி ஐநா சபையில் அறிஞர் ஒருவர் சமர்ப்பித்தார் அதனை தட்டி கழித்ததும் இல்லாமல் அவரை கொலை செய்யவும் தயாரானது உலக அரசியல் அமைப்பு அந்த அறிஞர் தப்பித்ததே பெரும்புண்ணியம் ....இவ்வாறு பல பல விஷயங்கள் உள்ளது நாம் அவர்களின் ஊழலில் தான் இயல்பு வாழ்க்கையை நடத்தி வருகிறோம் ....
கடைசியாக இதற்கு பதில் இளைஞர்கள் முதல் யார் வந்தாலும் அவர்களையும் உலக அரசியல் அமைப்புகள் ஆள்வார்கள் ....
அப்துல்கலாம் முதல் நம்மாழ்வார் வரை கொலை செய்தனர் என்பதை உற்றுநோக்கினால் நன்கு விளங்கும் .....நன்றி தோழா ...

அத்தனையுமே விலை போன காட்சிகள் தோழமையே .....இவர்களால் ஒன்றும் செய்ய இயலாது .....இவர்களின் நோக்கமே நம்மை சீண்டி பார்ப்பதுதான் ..இதுவரை அமைதியாக இருந்த நாம் தன்னெழுச்சி பெற்றோமே இதுவும் அவர்களின் வெற்றியே ....நாம் போராடுவதால் யாது பயனும் கிட்டப்போவதில்லை ....அதற்கு பதிலாக செயல்பட்டால் அவர்கள் அச்சம் கொள்வார்கள் ...தற்சார்பு முறை ஒன்றையே இதற்கு தீர்வு ....அதன் விழிப்புணர்ச்சி விரைவில் பரவும் ...நன்றி

நன்றி தெய்வசிகாமணி அவர்களே ....பதிவு உண்மையை அப்பட்டமாக விளக்கி உள்ளது .....

நாட்டு நாடுகள்தான்=நட்டு மாடுகள்தான்

பீட்டாவுக்கும் இதுக்கும் சம்பந்தம் பாதிதான் இருக்கு ......பீட்டா வ இயக்கிறவன் யாரு ? இங்கதான் நாம புரிந்துகொள்ள முடியாத புதிராவே இருக்கு ....இருப்பது 5 வகையான நாட்டு நாடுகள்தான் ஆகையால் இதிலிருந்து தெரிவது என்னவெனில் ஏற்கனவே பல நாட்டு மாட்டு இனங்களை அழித்து விட்டார்கள் ...மீதியையும் அழிக்கும் திட்டம்தான் என்பது ஒருபுறம் இருக்க இப்போது அதை போராட்டமாக மாற்றியதன் பின்னணி என்னவாக இருக்கும் ......இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் ....பிரித்தாழும் சூழ்ச்சியை மீண்டும் மறைமுகமாக நடந்தேறிவருகிறது அதுவே ஈழப்பிரச்சனைக்கும் காரணம் இன்று நடக்கும் போராட்டத்திற்கும் காரணம் ....ஒற்றுமையை நிரூபித்துவிட்டோம் ஆனால் இதை வைத்துதான் அவர்கள் விளையாட்டை துவக்கியுளார்கள் ....உண்மைதான் ,இது பருமடா முக்கோண ரகசியம்போலத்தான் நடக்கிறது ......இது குறித்து பேச நிறையவே இருக்கிறது தோழமையே ,காரணம் 17 ஆம் நூற்றாண்டில் துவங்கிய சூழ்ச்சி அல்லவா ....மீடியா அவர்களின் கைக்கூலிகள் , அரசியல் அமைப்புகள் அவர்களின் கைக்கூலிகள் ,இங்குள்ள பெரிய நிறுவனம் அவர்களின் கைக்கூலிகள் ....இதன் வேர் எங்குள்ளது என்பதை நம்மால் யோசிக்கவே இயலாத அளவு செய்துவைத்துள்ளனர் அவர்கள் .....யார் அவர்கள் ? இதுதான் இன்றைய மிகப்பெரிய கேள்வி ....கண்ணிருப்பவன் பார்க்கிறான் என்று வெளிப்படையாக சவால் விடும் மனித இன துரோகிகள் அவர்கள்.... இல்லுமினாட்டி என்ற அந்த கும்பல் குறித்து ஆராய்ச்சி செய்து பாருங்கள் ,உண்மை அம்பலமாகும் ....நாம் நம்மை அறியாமலே அவர்களின் கை பாவைகளாய் இருப்பது புரியும் .....அவர்களுக்கு நாம் புழு ,பூச்சிகள்தான் .....நன்றி ....ஆராய்ந்து அறிந்துகொள்ளுங்கள்

போராட்டம் சென்ற வழி சரியே ....நீங்க வருத்தம் தெரிவிக்கவே வேண்டாம் ,காரணம் நாம் எல்லோருமே மீடியா விளையாட்டில் பலியானவர்கள் .....நமது நோக்கம் ஜல்லிக்கட்டு மட்டுமே ,இதை வைத்து நம்மில் சிலர் வெளிநாட்டு குளிர்பானங்கள் ஆகியவற்றுக்கும் ,ஆற்றுமணல் கொள்ளை என்று அடுக்கும் போதுதான் சற்று திணறினோம் ....காரணம் அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தீர்வு காண்பது என்பது நடவாத காரியம் ,அவ்வாறு புரையோடிப்போய் இருக்கிறது நம் மாநிலம் எனினும் நாம் ஒன்றுசேர்ந்ததே மிகப்பெரிய வெற்றிதான் அதுவும் தமிழன் என்ற ஒற்றை சொல்லாய் இணைந்தோம் என்பதுமட்டுமே கவனிக்கத்தக்க வெற்றி .....போராட்டத்தை திசை திருப்ப வேண்டிய கட்டாயம் அல்லது நோக்கம் ஒன்றையே குறி வைத்தது அது நம் கூட்டத்தை பிரிப்பது ....ஏன் கூட்டத்தை கலைக்க வேண்டும் காரணம் இது முன்னுதாரண அறப்போராட்டம் அதுவும் இளைஞர்கள் நடத்துவது ....இது பல திட்டங்களை நம் மண்ணில் செயல்படவைக்கும் சக்திவாய்ந்ததாக மாறிவிடக்கூடாது என்பதே அவர்களின் நோக்கம் ......இந்த போராட்டம் பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூட பயத்தை தந்திருக்கும் ஆகையால் இதனை திசை திருப்புகின்றனர் ......ஒன்றிணைந்து போராடி வெற்றிகண்ட நாம் இனி ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றிக்காண வேண்டும் என்பதே இனி வரும் நோக்கமாக இருக்க வேண்டும் .....இனி போராட்டமே இல்லை செயல்தான், செயலுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற வியூகங்களை வகுத்து செய்லபட வேண்டும் அதுதான் நிரந்தர அடியாக, தீர்வாக இருக்கும் ......நாம் வருத்தப்பட்டு அவர்களை வெற்றியாளர்களாக மாற்றிவிடக்கூடாது என்பதே ஏன் தாழ்மையான விண்ணப்பம் ......நாம் வெற்றிபெற்றுஇருக்கிறோம் காரணம் கர்ப்பிணி பெண் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் ,நான் நாம் வெற்றிபெற்றுஇருக்கிறோம் காரணம் குழந்தைகளும் ,குடும்பங்களும் கலந்து கொண்டதால் ,நாம் வெற்றிபெற்றுஇருக்கிறோம் காரணம் பெரியவர்களை, முதியோர்களுக்கு நம்மை முன்னுதாரணமாக காட்டிக்கொண்டதால் ......இப்படி பல நல்ல விஷயங்களை நினைத்து பூரிப்படைவோம் ,நாளைய போராட்டம் நம் உலகத்தின் ஒற்றுமைக்காய் ,செயல்பாடு நம் இனத்தின் வெற்றிக்காய் ....உலகத்திற்காய் போராட நம் மூத்தகுடி தயாராகட்டும்.... ....வருத்தப்படாதீங்க ,நம் போராடிய தீரத்தை எண்ணி பெருமை கொள்ளுங்கள் உலகமே அதைத்தான் செய்கிறது என்று நம்புங்கள் அதுதான் உண்மையும் கூட ......நன்றி

வாழ்த்துக்கள் .....அழகான கவிதை ....சொற்கள் தேனமுதம் ,வார்த்தை மலர்கோர்வைகள் ....

அவர்கள் சட்டம் போடாமலே அதை தான் செய்து வருகிறோம் ....இன்று வரை ஒரு உணவு கூட நமது பாரம்பரிய ரகம் சார்ந்தவை அல்ல ....எல்லாமே குட்டை பயிர் என்ற செயற்கை விவசாயத்தை நம்பி வளர்க்கப்படும் பயிர்கள்...அதையும் நாம் பாலிஷ் போட்டு வெண்மையாக்கி பளபளப்பாக்கி உண்கிறோம் ....நாம் நமது கலாச்சார போட்டி நடத்த தடை விதிக்க இவர்கள் யார் என்று எப்படி சீறுகிறோமோ அது போன்றே ஒவ்வொன்றுக்கும் சீறுவதால் மட்டுமே நம்மை காத்துக்கொள்ள நமது கலாச்சாரத்தை காத்துக்கொள்ள இயலும் ....இது ஒரு இயக்கமாக இயங்க வேண்டும் செயலாற்ற வேண்டும் அண்டை நாட்டு வியாபாரத்தை முற்றிலும் செயலிழக்க செய்ய வேண்டும் ....நமக்கு நாமே உண்வவு உற்பத்தி செய்து அதற்கு உரமும் தயாரித்து உன்ன வேணும் ....நம்மாழ்வார் இதைத்தான் கூறியே வந்தார் தயவு செய்து அவரின் வாக்குக்கிணங்க வாழ்வோம் செயற்கையை சாகடிப்போம் நன்றி ///

வியாபாரம் .....கலாச்சாரத்தை முழுமையாக அழிக்கும் திட்டம் என்று பார்ப்பதை விட மீண்டும் நம் விவசாயிகள் உணர்ந்து தெளிந்து இயற்கை விவசாயம் பக்கம் திரும்பிவிடக்கூடாது என்பதில் உள்ள சூட்சுமம் இந்த ஜல்லிக்கட்டு எதிர்ப்பு ...முழுவதுமாக இது ஒரு சதி...இது இங்கு மட்டும் அல்ல இந்திய முழுவதும் நடக்கும் ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகளுக்கும் நடந்தே வருகிறது ....மொத்தத்தில் நாட்டு மாடுகளை இந்தியாவின் மண்ணிலிருந்து சுவடில்லாமல் அழிக்க நடக்கும் அதிபுத்திசாலித்தன முயற்சிதான் இந்த ஜல்லிக்கட்டு தடை போராட்டம் ....இதனை செய்ய இவ்வளவு துணிச்சலை வழங்கியுள்ள அரசாங்கம் ஒரு போலியாகவே தெரிகிறது ...ஆனால் முக்கியமான ஒன்று இந்த நாட்டு மாட்டின் உயிரணுவை மட்டும் இந்தியாவிலிருந்து அங்கு பத்திரப்படுத்தி விட்டார்கள் ....கொடும் பாவிகள் இவர்கள் ....இந்தியா தலைகுனிய வேண்டிய விஷயம் எவனோ நம் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கிறான் அதற்க்கு நமது அரசாங்கம் துதிபாடுகிறது உண்மையில் அரசாங்கம் மக்களுக்கா அல்லது அந்த மானம் கெட்ட வியாபாரிகளுக்கா.....தயவு செய்து இயற்கை விவசாயத்துக்கு திரும்புங்கள் காளைகள் உழவுசெய்யட்டும் ...ட்ராக்டர்கள் அல்ல இந்த சதிகளை தமிழா நீ உணர்ந்திடு தெளிந்திடு ......நம் கலாச்சரம் நம் கையில் இருக்கட்டும் ...நன்றி இந்த கேள்விக்கு

அறிவியல் ரீதியாக என்பதை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன் ....சிந்திப்போம் அய்யா ....நன்றி பதிலுக்கு

ஹைபிரிட் தான் இன்றைய அணைத்து நோய்களுக்கும் காரணம் என்பது என் தாழ்மையான கருத்து....விரைவில் இது குறித்து மேலும் சிந்திப்போம் ....நன்றி ஆக்கமிக்க பதிலுக்கு

முயற்சிக்கிறான்-முயற்சிக்கிறேன்

கண்டிப்பாக எழுத முயற்சிக்கிறான் அய்யா கட்டுரை வடிவில் பதிவு செய்கிறேன் அய்யா ....நன்றி

உணவு கிடைக்கவில்லை என்பது மாயையான பேச்சு ....காரணம் நாம் எவ்வளவோ செலவழித்து அணுஆயுதங்கள் வாங்குகிறோம் ஆகையால் நம்மால் உணவு விளைவிக்க இயலாது என்பதே பொய்களில் பெரும் பொய் அய்யா ...நீங்கள் சொல்வது உண்மைதான் அரசாங்கம் தடி விதிக்க வேண்டும் இது போன்ற நாசவேலைகளுக்கு

பாவம்தான் சாண்டாக்ளாஸ் ஹா ஹா அற்புதம் அய்யா விளக்கம்


கார்த்திக் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே