நாட்டு இன மாடுகளின் அழிவு

நாட்டு இன மாடுகளின் அழிவு
ராபர்ட் கிளைவ் தொடங்கி வைத்த அழிவு !

நமது நாட்டு நாடுகளின் அழிவு என்பது இன்று நேற்று தொடங்கியது அல்ல. 300 வருட சரித்திரம் அதில் இருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவிற்கு வந்த ராபர்ட் கிளைவ் தான் நமது நாட்டு நாடுகளின் அழிவிற்கு முன்னோடி. 1755 -ல் இந்தியா வந்த கிளைவ், தமிழர்களின் விவசாய நுணுக்கத்தையும், இந்தியாவில் இருக்கும் பெரும் எண்ணிக்கையிலான நாட்டு மாடுகளையும் கண்டு வியப்பும், திகைப்பும் அடைந்தார். இவற்றை வைத்து எந்த செaலவும் இல்லாமல், விவசாயம் செய்யும் தமிழனின் பாரம்பரிய விவசாயமுறை அவரை உறுத்தியது. அடிமை நாட்டில் வாழும் தமிழன், எப்படி அனைத்து தேவைகளையும் அவனே பூர்த்தி செய்து கொள்வது என்ற சிந்தனை கிளைவை தூங்கவிடாமல் செய்தது.

அடிமை மக்கள், தான் சார்ந்த பிரிட்டிஷை சார்ந்துதான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளைவ் செய்த முதல் காரியம், விவசாயத்தின் முதுகெலும்பாகவும், விவசாயிக்கு உறுதுணையாகவும் இருந்த நாட்டு மாடுகளை அழித்தது தான். இதற்காக இந்தியா முழுவதும் பசுவதை கூடங்கள் ஏற்படுத்தினார். மேலும், 1760-ல் ஒரு இயக்கம் தொடங்கப்பட்டு, அதன் மூலம் ஒரு நாளைக்கு 30,௦௦௦ மாடுகள் என்ற கணக்கில் மாடுகளை கொன்று குவித்தது.

ஆரம்பத்தில் ஒன்றிரண்டு என்று உருவான பசுவதைக்கூடம் 1910-ம் ஆண்டில் 310 என்ற பெரிய எண்ணிக்கையைத் தொட்டது. மாட்டு சாணத்தையும், அதன் சிறுநீரையும் உரமாக கொண்டு நடந்த விவசாயம் நலிவடைந்தது. உழவுத்தொழில் நாடுகளின் எண்ணிக்கை குறைவால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது நம்நாட்டின் விவசாயின் கையில் ஆங்கிலேயர்கள் திணித்ததுதான், அவர்கள் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரசாயன உரமாகும்.

அதேவேளையில், நமது நாட்டு இன காளைகளின் விந்துக்கள் மூலம், அவர்கள் நாட்டில் காங்கேயம் போன்ற நாட்டு காளைகள் உருவாக்கப்பட்டன, பசுவதைக் கூடங்கள் மூலம் அதிக எண்ணிக்கையில் நம் இன மாடுகள் வதைக்கப்படுவதை பற்றி காந்தியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்க்கு காந்தி இந்தியா சுதந்திரம் அடைந்ததும் பசுவதைக்கூடங்கள் மூடப்படும் என்று பதிலளித்தார். நேருவும் அதையே வழிமொழிந்தார்.

ஆனால், பசுவதைக்கூடங்கள் மூடப்படவே இல்லை. மாறாக, 310 என்ற எண்ணிக்கையில் இருந்து, நாடு சுதந்திரம் பெற்ற பின்பு 30,௦௦௦ என்ற இமாலய எண்ணிக்கையை தொட்டது. ஒரு மணிக்கு, 10,௦௦௦ பசுக்களை கொல்லும் திறன் கொண்ட இயந்திர பசுவதைக்கூடங்கள் வந்துவிட்டன. ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் என்ற இலக்கு வைத்து நாட்டு மாடுகள் நாடு
முழுவதும் தினமும் கொல்லப்படுகின்றன. தற்போதைய கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 7.5 கோடி மாடுகள் இருக்கின்றன. இந்த விதத்தில் மாடுகள் அழிக்கப்பட்டால், இன்னும் எத்தனை ஆண்டுகள் மாடுகள் .இருக்கும் என்பது தெரியவில்லை. நமது பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் நிலையில் தான் நாம் இருக்கிறோம். நமது பாரம்பரியத்தை மீட்டெடுப்போம்.

நன்றி: தினத்தந்தி

கோன்முடி - தெய்வசிகாமணி

எழுதியவர் : தெய்வசிகாமணி (24-Jan-17, 12:35 pm)
பார்வை : 376

சிறந்த கட்டுரைகள்

மேலே