என் இதய டாலுவுக்காய் 3
அன்பின்
கால மேகம் காதல்
பூக்கச் செய்ததோ
காதல் வானில் -என்னை
ஏற்றி செல்லுதோ.....
உன்
மழலை மொழியில்
நீ பேசுகின்ற வார்த்தைகள்
என் மௌன காட்டில்
தீயை மூட்டி போகுதோ....
இரவில்
பிறை சூடிய இளம்வான
நேரத்தில் மகிழ்த்தாரகை
பனிதெளித்திடும் காலத்தில் -அந்தரங்க
வார்த்தைகள் பரிமாறுதோ ....
இறைவன்
கருந்துளையின் அலைக்கற்றை
எடுத்தானோ உன் கழுத்தினில்
மச்சம் என வைத்தானோ-அதில்
என் சித்தங்களை இறுக்கி தைத்தானோ.....
சுகமான
கோடி பூக்களை என்னுள்
பூக்கவைத்தவளே வானம்
கெஞ்சிடும் அழகுடன்
வந்து நின்றவளே......
நினைவில்
நிஜமாய் நீ இருக்க
நிஜத்தில் நிழல் போல் இருப்பவளே
நிழலை களைத்திட
வருவாய் புதியவளே ......
புருவத்தின்
அசைவில் புழுவாய் துடிக்கிறேன்
உன் எச்சில் துளிகளை அனுப்பிவை
அதில் நனைந்து என் மொத்த
ஆயுளை நீட்டித்து கொள்வேன்....