ஒரு சுகம்
ஒரு தலை காதல் என்பது
ஒரு சுகம்
முட்டையை பத்திரமாக அடைகாக்கும்
தாய் மடியின் சூடும் சுகமும்
தனக்குள் ஒளித்து வைத்த
இந்த காதலில் உண்டு .
நேசித்த இதயம் வேறு யாருக்கோ
சொந்தம் என தெரியும் போது
தன குஞ்சை கழுகு தூக்குவதை கண்டு
போராடி கொக்கரித்து எதுவும் செய்ய
முடியாமல் சோர்ந்து நிற்கும் தாய் கோழியின்
வேதனையும் உண்டு இதில் ...
ஆனால் பின்னொரு நாளில்
அது நினைவுகளை மட்டும்
அந்த அழகிய நினைவுகளை மட்டும்
அடைகாக்க தொடங்கும் மீண்டும் ....