ஆறுவது மழை

வழிதவறிய க்கியா க்கியாவின்
வெகுநேரத்திய தேடலில்
மலைத்திருந்தது
மந்தார வானிலை...

ஒலிப்பெருக்கியில்
"சின்னத் சின்ன தூரல் மின்ன"
பாடலில்
பிரபு கரைந்திருக்க
மேற்கு மலைத்தொடர் மேடையாகியிருந்தது...

அடங்கிய மண்வாசத்தில்
துளித் துளியாய்க்
கூவுகின்றது குயில்..

கூரை வேலிக்குள்
தொடர்ந்து களையெடுக்கின்றது
ஒற்றை ரோஜா ...

எதிர்பார்த்தபடியே அழைத்தாய்
மறந்துவிட்டதாக எண்ணி,
காபி போல...

வெளிர்ந்த வானத்தில்
மாதவிடாய் மேகம்
அடுக்களை தவிர்த்திருக்க,

பசித்த சங்கிலியின்
நீளத்தைக்
குறுக்கிக் கொண்டிருந்தது
நாய்க்குட்டி.....!

எழுதியவர் : புலமி (18-Jun-15, 3:55 pm)
பார்வை : 174

மேலே