எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.! கடந்த இருமாதங்களாக நம் தோழர்கள்...



தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.!   


கடந்த இருமாதங்களாக நம் தோழர்கள் அனைவரையும் தளத்தினுள் ஏறக்குறையக் கட்டிவைத்திருந்த ஒரு வெற்றிகரமான தொடராக “காட்சிப்பிழைகள்..” எனும் கஜல் தொடர் அமைந்திருந்தது என்பதில்,உங்களைப் போலவே நானும் மகிழ்ச்சி கொண்டிருந்தேன்.இந்த மகிழ்ச்சியை புத்துணர்வுடன் துவக்கி வைத்த தம்பி ஜின்னா,நன்றிக்குரியவர். உங்கள் அனைவரின் சார்பிலும், காட்சிப்பிழைகளின் வரிசையில் முத்தாய்ப்பாக நீங்கள்தான் எழுத வேண்டும் என்று ஜின்னாவால் எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்கும் சேர்த்து எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.!கடந்த சில நாட்களாக நம்தோழர்கள் அனைவரும் எழுதிய கஜல் கவிதைகளை நான் அவ்வப்போது வாசித்துக் கொண்டுதான் இருந்தேன். கருத்து எதுவும் பதிவு செய்யமுடியவில்லை. காரணம்..பிறகு சொல்கிறேன்.!

தோழர்கள் எழுதிய கவிதையில்..இன்னாரென்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.எழுதிய எல்லோரும் அவரவர் நாளில்,அபாரமாக எழுதியிருந்தனர்.வரிகளில் தெறித்த சிந்தனைகள் சிலநேரம் என்னை வாயடைக்க வைத்தது.வரிகளிலேயே என்னை சுழன்று கொண்டிருக்கப் பணித்தது.உவமைகள்,வார்த்தையில் மிளிர்ந்த ஜாலங்கள் வாண வேடிக்கையை நிகழ்த்தியிருந்தன.!.கஜல் தொடரினை பயிற்சிக்களமாக கொள்ள வந்தவர்களெல்லாம் அதில் அற்புதமான முறையில் ஜெயித்துக் கொண்டே போனார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.அனைவருக்கும் மனமுவந்த எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி..மிக்க மகிழ்ச்சி..!

கூடவே..தோழர் அகன் அவர்களும்,திரு.கவின்சாரலன் அவர்களும் தோழர்கள் எழுதப்போகும் கவிதைகளின் போக்கை செழுமைப்படுத்தும் விதத்தில் தங்கள் கருத்துக்களையும்,உதாரணங்களையும் அழகாக அடுக்கிக் கொண்டுபோனது நல்ல வழிகாட்டுதலாகவும் இருந்தது.அவர்களுக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களும்..!


தோழர் டி.என்.முரளி அவர்களுக்கு பிரத்தியேகமாக எனது நன்றியையும் வாழ்த்தையும் சொல்லவேண்டும்.காரணம்..வழக்கமாக “தம்பி உடையான் படைக்கஞ்சான்..”என்பதுதான் பழமொழி.ஆனால்..அண்ணன் இருக்கிறேன் அஞ்சேல்..என்று,தம்பி ஜின்னாவின் பளுவைத் தாங்கிப் பிடித்ததில் புதுமொழியை சொல்ல அல்ல..செய்தே காட்டிவிட்டார். “முரளி சார்..மிக்க நன்றி சார்.!”
அப்புறம்..தோழர்களே..கஜல் கவிதைகளோடான உங்களது ருசிகர அனுபவத்தை எப்போதேனும் இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.! எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாமா..?

நானும் இத்தொடரில் எழுத வேண்டுமே..என்பது ஆரம்பத்தில் கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தது.எந்த இலக்கணத்திற்குள்ளும் சிக்காமல் வந்ததையெல்லாம் எழுதிக் கொண்டிருந்தவன் பேசாமல் அப்படியே இருந்திருக்கலாம்.

ஆனால்,சும்மா இருக்காமல் வலியப் போய் (ஒரு ஆர்வக் கோளாறில்தான் ) ஜின்னாவிடம் வாய்ப்பு கேட்டு மாட்டிக் கொண்டோமா..என்று கூட கேள்வி வந்தது.

சரி..கஜலுக்கான இலக்கணத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று இணையத்தில் தேடிப்பார்த்ததில் நிறைய நிறைய வரைமுறைகள், வரம்புகள்..என கண்ணைக்கட்டியது. அதுவும் கஜல்கள், அடிப்படையில் உருது மொழியிலிருந்து வந்தது என்பதால் ராபியா என்றும்,ஷேர் என்றும், மத்லா, அப்புறம் மஃதா என்றும் இருந்த வார்த்தைகளை நினைவிலிருத்தவும் சிரமமாக இருந்தது.(இலக்கணத்தில் சிக்கல் இல்லை..வரும் பிப்ரவரி.18.ஆம் தேதியில் 50 வயதை தொட இருக்கிறேன்.ஒருவேளை அதுவும ;காரணமாக இருக்கலாம்) இதனால் கூடவே கவலையும் தொற்றிக் கொண்டது.எல்லாவற்றையும் விட பெரிய கவலை..கஜல் கவிதைகள் பெரும்பாலும் காதலையும்,அதன் பின்னனியில் இயங்கும் ஒரு சொகத்தையும்.. இல்லையில்லை.. ஒரு சோகத்தையும் பாடிக் கொண்டிருப்பதாக இருக்கவேண்டும் என்பது ஒரு விதியாக வேறு மிரட்டிக் கொண்டிருந்தது. அடக்கஷ்டமே..இத்தனை வயசுக்கப்புறம்..காதல் என்ற மூடுக்குப் போய்..அதை அடிப்படையா வெச்சு கவிதை..அதுவும் கஜல் கவிதை எழுதணுமாமே..!..ஊம்..இது நடக்குமா..? என்று எனக்கு சந்தேகமும் வந்துவிட்டது.

எனக்கு இருந்த வேலைப்பளுவும், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகளுக்கான நெருக்கடியும் தொடர்ந்து சுமையாய் அழுத்த.. ஸ்..ஸ்..அப்பாடா..அப்புறமாய்ப் பார்த்துக் கொள்ளலாம்..இன்னும் நாள் இருக்கிறதே..! என்று நாட்களை ஓட்டிவிட்டேன். திடுமென்று தம்பி ஜின்னாவின் அழைப்பு..நாளை உங்கள் கவிதையைப் பதிக்க வேண்டும்.நினைவிருக்கிறதா..? என்று.ஷ்..அப்போதே காற்றுப் போய்விட்டது. 

நல்லவேளை..தோழர் அகன் அவர்கள் உடனடியாக தமிழன்பன் அவர்களின் கஜல்பிறைகள் புத்தகத்தை அனுப்பிவைத்து பெரும் உதவி செய்தார். இலக்கணத்தையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கவிதையின் போக்குகளை மட்டும் பார்த்தேன்.லேசாகவொரு நம்பிக்கை வந்தது.மேலும் ஜின்னா ஒருமுறை பேசும்போது,கஜல் கவிதையை நூறு சதவீதம் இலக்கண வரம்புக்குட்பட்டு எழுதவேண்டும் என்ற மரபுகள் எல்லாம் எப்போதோ உடைக்கப்பட்டு விட்டது சார்..” என்று சொன்னது நினைவுக்கு வர.. அப்பாடா.. நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக் கொண்டது போல.. ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.

காரணம்..சகல அடக்குமுறைகளிலிருந்தும் விடுதலை என்ற வாசகம் மிகவும் பிடித்தமானது.என்னைப் பொறுத்த வரை இப்போதைக்கு இலக்கணத்திலிருந்தும்தான்.!

எழுதவேண்டும் என்று துவங்கியதிலிருந்து..மூன்று கவிதைகள்(?.),எழுதி விட்டேன்.எனக்கு அளிக்கப்பட்ட காட்சிப்பிழைகள்.50 என்ற எண்ணின் தொடர்ச்சியாக 51 மற்றும் 52.என வரிசை எண்ணும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.-ஜின்னா மன்னிப்பாராக..-50,51,52-என வரிசையாக கவிதைப்பக்கத்தில் பதிவு செய்திருந்தாலும் 52 என்ற எண்ணுள்ள கவிதை மட்டும் கூடுதலாக,கஜல் பாடகர் ஃபரிகா பர்வேஷின் பாடல் பின்னனியில் ஒலிக்க,அந்த ராகத்திற்காக எனது வரிகளை எழுதி,(மொழியாக்கம் அல்ல சொந்த வரிகள்தான்..) -எண்ணம் பகுதியில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளேன்.

எனது வரிகள் பிடிக்கா விட்டாலும் அந்தப்பாடலை உங்கள் கண்களை மூடிக்கொண்டு ரசிக்கலாம்.அற்புதமான பாடல்.நேரம் இருப்பவர்கள் அதனையும் பார்க்கலாம். -என்னடா..இவ்வளவு நேரமாக எழுதிக் கொண்டிருக்கிறானே..என்று யோசிக்காதீர்கள்.இரவு 12 மணியாக வேண்டும்.இதனை மறுநாள் கணக்கில் சேர்க்கவேண்டுமே.அதுதான் உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன்.

 மேலும்..உங்கள் கவிதைகளுக்கு கருத்து பதியாதற்கு காரணம் அப்புறம் சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா..அதை இப்போது சொல்லிவிடுகிறேனே..பெரிய விஷயமெல்லாம் ஒன்றும் இல்லை..,

எனது இடது கை கடந்த சில நாட்களாக ஒழுங்காக வேலை செய்யமாட்டேன் என்கிறது.குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் தூக்கவும் முடிவதில்லை.கணிணியின் முன்பாக அமர்ந்து தட்டச்சு செய்வதற்கு குறிப்பிட்ட ஒரேமாதிரி கையை வைத்திருக்க வேண்டுமல்லவா..? அதுவும் முடிய மாட்டேங்குது. பயங்கர வலி.மூன்று மருத்துவர்களிடம் சென்று பார்த்துவந்து விட்டேன்.அறுவைக்கு நிகரான சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறிவிட்டார்கள்.அதற்காகக் காத்திருக்கிறேன். அதனால்தான், ஆதாமின் அப்துல்லா தொடரும் பாதியில் நிற்கிறது.

அப்புறம் எப்படி இவ்வளவு நேரம் எழுதினாய் என்றுதானே கேட்கிறீர்கள்..? ஒரே கை..ஒரே விரல் டொக்கு டொக்கென்று ரொம்ப நேரமாய்த் தட்டித்தான் எல்லாம் எழுத முடிந்தது.!  அப்படியேனும் எழுத முடிந்ததே.. என்று இப்போதைக்கு மகிழ்ச்சி கொண்டிருக்கிறேன்.மீண்டும் பேசுவோம் தோழர்களே..!

உங்களுக்காக காட்சிப் பிழைகள் .52


 e>


நாள் : 30-Jan-16, 12:04 am

மேலே