Nishan Sundararajah - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Nishan Sundararajah |
இடம் | : கத்தார் |
பிறந்த தேதி | : 17-Mar-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Apr-2011 |
பார்த்தவர்கள் | : 1154 |
புள்ளி | : 148 |
எண்ணத்தில் தோன்றிய கவித்துளிகள்
ஏட்டில் பதிந்து அழகு பார்த்தவன் நான்,
இன்று என் கவிகளுக்கு ஒரு களம் கிடைக்காதா ?
என்ற எண்ணத்தில் .. இத்தனை நாட்கள் என் நாட்குறிப்பில் மட்டுமே பதிந்த கவிகளை .. இன்று இணையத்திலும் எழுதுகிறேன் களத்துக்கு நன்றி .. எழுத்துக்கு நன்றி ..
காதலியே !
குவியத் தொலைவில்
என் குடும்பத்தின்
அங்கமே ...
எதிர்வுகூறினால்
என் எதிர்காலமே !
எதிர்முனையில்
என்னை எண்ணி
வருந்தும் உன் குமுறல் ..
என் இதயத் திரையில்
அரங்கேறி செல்கிறது.
எதிரும் புதிருமாய்
எண்ணங்கள் ஏக்கங்கள்
இண்டு இடுக்கெல்லாம்
சென்றெனை கொல்கிறது..
என்னவளே !
இடைவெளி வந்து
தளிர்விடும் முன் - நாம்
எதிர் எதிர் திசைகளில்
புறப்படும் முன் .
உள்கொண்ட விசனம்
பரிமாறிக்கொள்வோம்
உள்ளபடியே
பரிகாரம் காண்போம் .
மூவிரு திங்கள் கடந்த
பின்பும் ..உன் மூளையில்
கனக்கும் எண்ணம் ஏனோ ?
நாம் கலந்து பேசி
கரையென
கண்டது என்ன
கானல் நீரோ ?
பல ஆயிரம் மண
பொய்கைக் கரையில் பூத்திருந்த புதுமலர்கள்
பொய்யில் புனைய கவிஞன் வரக் காத்திருந்தன
பூவுக்கு ஒரு பாடல் பாடு என்றது
பூவின் பொழுது அதற்குள் முடிந்துவிடுமே என்றேன்
முடிந்தால் என்ன பாவில் நாங்கள் வாழ்வோம் என்றன !
விருந்துகள் கண்டே
பருந்துகள் பறக்கும்
வருந்துவதால் தீராது
மருந்துகள் வேண்டும்!
அகமலர் சொக்கும்
முகமலர்த் தேடல்களில்
சோகம் சூம்பி
சுகம் கூடிட வேண்டும்!
பொய்மைகளின் புகழ்
வாய்மைகளில் சலவைத்
தூய்மை செய்யப்படும்
வாய்ப்பு வேண்டும்!
எத்திசையும் இங்கு
ஒத்திசைவாய் கூடி
மத்திமம் நிலைபெற்ற
புத்தியும் வேண்டும்!
கொஞ்சு தமிழ் எங்கும்
மிஞ்சியிருக்கையில்
நஞ்சுமொழி பரவலாய்
விஞ்சுவதா வேண்டும்!
பாட்டிகள் சொன்ன
குட்டிக்கதைகள் யாவும்
பெட்டித் திரைகளில்
முட்டுவதா வேண்டும்!
நமக்கென்ன என்று
உமக்கென்ன என்று
ஓரங்க நாடகங்கள்
ஒழிக்கப்பட வேண்டும்!
மெத்தனப் போக்கில்
எத்தனை நாட்கள
பெண்களே!!
மண் குதிரைகளை நம்பி
கடலில் இறங்காதீர்கள்
உங்கள் நீச்சல் திறமையை மட்டும்
நம்புங்கள்!!
அக்கரை தொடலாம்...
ஒருவேளை....
மரத்தமிழனை கண்டீர்களானால்
அவனை நம்பினால்
நம்புங்கள்....
மிதந்து சென்றாவது
அக்கரை சேர்ப்பான்...?!
காரணம்
அழகு என்பது
பருவ தோற்றம்
ஆண்மை என்பது
உண்மை தோற்றம்
காலம் கடந்தும்
மாறாதது...!!!!
காற்றோடு கலைந்தாடும் உன் கூந்தலுக்கு
கார்முகிலோடு உறவு
பூக்களோடு புன்னகை புரியும் உன் இதழ்களுக்கு
முல்லை மலரோடு உறவு
கவிதைத் தமிழோடு விளையாடும் எனக்கு
நீ என்ன உறவு ?
அழகி ( ஜாரே )
------------------------------------------
காரிகை இவள்
தோரணை , தூவல்
தூவாத காவியம் ..
தூரிகை தீட்டாத
ஓவியம்.
கரிக்கோல்
கொண்டமைந்த
பனிக்கூழ் - இவள்
அன்பின் திறவுகோல்
செந்தூரம் சூடாமல்
அரிதாரம் அணியாமல்
பாவனை செய்யாமல்
சிறு பார்வையிலே
சிறைபிடித்தாள்.
இன்னட்டு நிறத்தவள்
இவள் தென்பட்டாள்
தாள்திறவா
ஆழ் மனதில்
பிணிக்கை இன்றி
பின்னிப்போனது
அவள் அழகு முகம்.
- நிஷான் சுந்தரராஜா -
தாமி (SELFIE)
--------------------------------
உளி இன்றி
வலி இன்றி
தன்னைத் தானே
செதுக்கிக்கொள்ள
வழி சமைத்தது - அழகு
சிலை அமைந்தது
SELFIE ( தாமி) வடிவில்.
- நிஷான் சுந்தரராஜா -
கண்ணாளனே !
------------------------------------------
நீ அருகினில்
இருக்கையில்,
அலை மோதும்
நெஞ்சம்.
உயரும் புருவங்கள் ,
திமிரும் தோள்கள் ,
காரணம் அறியாமல்
விரியும் இதழ்கள்
மயக்கத்தில்
கிரங்கச் செய்யும்
பெண்மை.
அயராமல் உன்னை
ஆராதிக்கும் ஆன்மா..
தயங்காமல்
வியக்க செய்யும்
உன் எண்ணம் ..
என்பு முதல்
மச்சை வரை
எங்கும் உன்
படையெடுப்பு.
என்றும் உன்
அரசாட்சி.
பல நூறு
ஆடவரில்
என்னை
அண்ணார்ந்து
பார்க்கவைத்த
ஆண்மகனே
உனக்கெனவே
பிறந்தேன் ..
பெண்ணானேன் . .
ஆனந்தத்தில்
ஆர்ப்பரிக்கும் - என்
கண்கள் சாட்சி
காதலிக்கிறேன்
விடை பெறுகிறேன் !
-------------------------------------
கல்லான என் இதயம் தட்டித் தட்டி
காதலை எழுப்பினாய் - இன்று
முள்ளான காட்டில் எனை முடக்கிவிட்டு ,
காதல் கல் என்கிறாய் .
காயம் கொண்ட என்
இதயத்தின் வலிகளே - கவிதைகளாயின
காதலை விதைத்த நீயே - காரணம் ஆகினாய்.
உன்னை நினைத்து நினைத்து அழுது
கண்கள் மட்டும் தான் ஈரமாகின..
உன் இரு செவியோ ...இதயத்தையோ
அது எட்டவில்லை .
மரணம் கூட நம்மை சேர்க்காது போலும்
என்னைக் கருவறுத்த நீயும் .
உன் மேல் கவி வடித்த நானும்
சொர்க்கத்தில் சேர்வது சாத்தியமில்லை.
என்னை நேசிக்க மறந்தவளே - நான்
சுவாசிக்க மறந்துவிட்டேன் ...
விடை பெறுகிறேன்
மரியாதைக்குரிய பாரத பிரதமருக்கு !
உங்கள் வெற்றி விமரிசை
களியாட்டத்தை
விமர்சனம் செய்யும்
எண்ணமில்லை !
உங்கள்..
பதவியேற்பு விழாவில்
ஒரு கருப்பு ஆடும்
நுழைந்துவிட்டதே
சிவப்பு கம்பள வரவேற்பில்
என்ற ஆதங்கத்தில் எழுதுகிறோம் .
உங்கள் அழைப்பின் பேரில்
வந்தது ..பெயர் சூட்டப்படாத
பேரினவாதம் பெற்றெடுத்த
பிள்ளை ..அது நீங்கள் அறிந்ததே.
நீங்கள் சமரசம் செய்து
சாமரம் வீசுவது ..
பசுந்தோல் போர்த்திய
புலி !
சர்வதேசத்தின் முன்
சரளமாய் நடமாடும்
விளங்கிடப்படாத
நடப்புக் கால சகுனி !
இதை யார் மூடி மறைத்தாலும்
மோடி மறந்திருக்க வாய்ப்பில்லை
நாம் உம்மை சாடவில்லை ..
நாட
தமிழன்...
நியாயப் பிச்சைக்கு
அநியாயத்திடம்
கையேந்தும் - இளிச்ச
வாயனாகிப் போக,
வெளிச்ச வெளிச்சமாய்
ஒவ்வொரு விடியலும் வருகிறது
இருளைச் சுமந்த படி...
ஊதிப் பெருத்த பேரினவாத
முதுகின் மேல் ...
உரிமைகள் பிடுங்கி,
உயிர்களை விழுங்கிய
ஊனங்களின் நரியாசனங்கள்
உறுதியாய்க் கிடக்கிறது !
வெடிப்பட்டு
இன்னலுற்று வெந்துத் தீய்ந்த
இனமிங்கு சர்வநாசம் !
இடி மின்னல் மட்டும் தந்து
இருண்டுப் போகும்
வானமாக சர்வதேசம் !
மண்ணைப் பறித்து
மக்களைத் தின்றவன்
மண் தின்று
மண்ணாய்ப் போகும் நாள்...
ஒவ்வொரு நொடியும்
சுபிட்சமாய் முடியும் !
ஒவ்வொரு இரவும்
வெளிச்சமாய் விடியும் !
கடலின் ஆழத்தைவிட
மனதின் ஆழம்
அதிகமோ?
கடல் நீரின்
உப்பை விட
கண்ணீரில் உப்பு
அதிகமோ?
அன்பின் ஆழத்தை விட
வெறுப்பின் ஆழம்
அதிகமோ?
மொழிகளின் ஆழத்தை விட
மௌனத்தின் ஆழம்
அதிகமோ?
என்னில் என்னை
தேடியதை விட
உன்னை என்னில்
தேடியது அதிகமோ?
அதிகமாகிப் போன
ஒவ்வொன்றும்
என்னில் அதிகமாகிப்
போனது அதிகமோ.............?
..................சஹானா தாஸ்!