வேண்டுமிந்த விடியல் - கே-எஸ்-கலை

தமிழன்...
நியாயப் பிச்சைக்கு
அநியாயத்திடம்
கையேந்தும் - இளிச்ச
வாயனாகிப் போக,
வெளிச்ச வெளிச்சமாய்
ஒவ்வொரு விடியலும் வருகிறது
இருளைச் சுமந்த படி...

ஊதிப் பெருத்த பேரினவாத
முதுகின் மேல் ...
உரிமைகள் பிடுங்கி,
உயிர்களை விழுங்கிய
ஊனங்களின் நரியாசனங்கள்
உறுதியாய்க் கிடக்கிறது !

வெடிப்பட்டு
இன்னலுற்று வெந்துத் தீய்ந்த
இனமிங்கு சர்வநாசம் !
இடி மின்னல் மட்டும் தந்து
இருண்டுப் போகும்
வானமாக சர்வதேசம் !

மண்ணைப் பறித்து
மக்களைத் தின்றவன்
மண் தின்று
மண்ணாய்ப் போகும் நாள்...

ஒவ்வொரு நொடியும்
சுபிட்சமாய் முடியும் !
ஒவ்வொரு இரவும்
வெளிச்சமாய் விடியும் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (18-May-14, 8:56 pm)
பார்வை : 231

மேலே