தீக்குள்ளே விரல் வைத்தால்
மேகத்தில் ஏறி
உலகை பவனி
வர ஆசை கொண்டேன் !
என் கால்களுக்குச்
சிறையிட நினைத்தால்
அந்த காற்றுக்கும்
கடிவாளமிடுவேன்!
வெற்று மூட
நம்பிக்கைகளை
விற்றுவிட்டேன்
விலையில்லாமல் !
என்னை ஏமாற்றும்
எல்லைகளை
இடித்தெறிவேன்,
கனாக்கள் துணைகொண்டு !
என் பேச்சைக்
கேட்காத எந்த
மனதையும் மாற்றிடுவேன்
மல்லிகைச் சிரிப்பாலே!
நதியாய் ஓடிடுவேன்
என் கரைகளை
உடைத்தெறிந்து !
இலக்கினைத் தொட்டாலும்
இடையறாது தொடங்கும்
என் தேடல்கள் ..
மீண்டும் சிகரங்களை
நோக்கிய பயணத்தை !!