நினைவின் தேடல்கள்

சில வேலியபிளான நேரங்கள் எல்லாம் அழகானவை . தனித்திருக்கிற தருணங்கள்ல எல்லாம் மறந்து போன சில முகங்கள் நினைவுக்கு வரும்.
ஒரு நூலிழையில் அவர்களுடைய பார்வையை, ப்ரியங்களை, அன்பை, அணைப்பை, ஒரு முத்தமிடலை, காதலை, ஒருமித்த இராத்திரியின் பொழுகளை, ஆறத் தழுவல்களை, தலைக் கோதல்களை இன்னும் என்னென்னவோ என சிலதை இழந்து போயிருக்கலாம்தான்.

வாழ்ந்த அத்தியாயங்கள் கொடுக்கும் நினைவின் தூரங்களைவிட,
அப்பொழுதோ அதன் பின்னால் எப்பொழுதோ உருவாகும் ஒரு பிரிவின் தருணம், அது கொடுக்கும் நினைவைக் கடக்க ஒரு ஆயுள் முடியவேண்டும். அன்போ எதுவோ அளிக்கப்பட்டது உண்மை என உணரப்படும்போது.

தெரியவில்லை
கூட்டங்களின் மத்தியில் பெரிதாகத் தோன்றாமல் ஆனால் அறிந்த
ஒன்றிரண்டு மனங்களில் பேரிடராக இல்லாமல் சிறு கல்லெறிந்தால் வட்டமிட்டுப் பெருகி அடங்கும் சிற்றலைபோல் இளைப்பாறி சென்றதென்னவோ உண்மைதான். போர்வைத் தாண்டி, பிஞ்சுருகும் பனிக் காற்று கால் தழுவியது நொடி, சட்டென சூடு தேடும் ஜோடிக் கால்களாகிப் போகிறது சில நினைவின் தேடல்.

விழுங்கவிழுங்க எழும் விக்கல்களாக நினைவுகள்.
அங்க இறுக்கங்களுக்கோ அகலும் பார்வைகளுக்கோ ஆயுளுக்கோ
வயதாகிக் கொண்டே இருக்கும்.
ஆனால் இளமையாகிக் கொண்டேப்
போகும், இனிக்கும், சிரிக்கும் நினைவுகள். அழகாக இருந்தால்
இதமாக உறங்கும்.‌ கல்லறைக் கடந்தும்.

பூக்களும், உதிர்மரங்களும், சன்னப்பின்ன மழையும், நீர்த்த சாலைகளும், பனித்த‌ காலைகளும் காலங்களைத் தீர்மானிக்கின்றன.
அத்தனைக் காலங்களுக்குமான
நினைவுகள் மாத்திரம் வாழ்க்கையின்
பயணங்களில் எதை எதையோத்
தீர்மானிக்கின்றன.

பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (19-Dec-24, 7:48 pm)
Tanglish : ninaivin THEDALKAL
பார்வை : 5

மேலே