வாழ்க்கை வாழ்வதற்கே

வாழ்க்கை சொல்லும்
பாடம்
இதுவரை
படித்ததில் இல்லை...

பிடித்ததை
நாடுவதை விட
நம்மை நாடுவதை
பிடித்து நடப்பதே
வாழ்வதன் சிறப்பு...

வழியும் நீரை
மறைக்க
புன்னகையே
முகமூடி
நம்மில் பலருக்கு...

வாழ் நாள்
எல்லாம்
வாள் வீசும்
துன்பத்தை
எதிர்த்து
அதை
கையில் எடுத்து
ஓடுவதில் தான்
பேரின்பம்...

அன்பாய்
பழகிய
முகமும்
ஆசையாய்
பேசிடும்
வார்த்தையும்
அலைபேசியில்
நிறைவடையும்
வாழ்க்கை
வாழ்கையில்

எங்கே ?
எப்படி??
புரிந்து
பிரியம் வைப்பது...

ஆடம்பரமோ
அரை வயிரோ
இதுவோ ,
எதுவோ ,
நம் ஓட்டம் மட்டும்
பம்பரம் போல்
சுழல் கிறதே...

நிற்காமல் ஓடி
நிலையற்ற
சுகம் தேடி
அன்பின் பாதை
நாடாது ,
உண்மை அன்பை
தேடாது
சவம் போல்
ஆகினோமே..

இந்த
வாழ்க்கை
வாழவே
இன்று
வாழ்க்கை
நம்மை பழக்கியது...

வாழ்க்கை பழக்கியதா?
இல்லை
இந்த வாழ்கைக்கு
நாம்
பழகி னோமா.?..


வெறுமையில்
பொறுமை தந்தது..
வறுமையின்
வழியிலும்
நடக்கக்
கற்று தந்தது...

கண் திறந்தே
உறங்க
வழி சொன்னது...

கண் உறங்கும்
வேளை
விழிக்க
சொல்லுது...

இது
புதிரா.. புதிதா..
வாழ்க்கை
வாழ்வதை தவிர
எல்லாம்
செய்கிறோம்....

என்று
வாழ்க்கையை
வாழ மட்டும்
செய்ய போகிறோம்..

வாழ்க்கை வாழ்வதற்கே...

எழுதியவர் : Karthika kani (19-Dec-24, 7:24 pm)
சேர்த்தது : Karthika kani KK
பார்வை : 24

மேலே