Karthika kani KK - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Karthika kani KK |
இடம் | : Coimbatore |
பிறந்த தேதி | : 09-Nov-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 03-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 155 |
புள்ளி | : 17 |
கவிதை என் காதலி ...rnநாளும் நான்rnஉயிர் வாழும்rnசுவாசம் rnஎன் தாய்மொழி .....
பிறப்பால் ஒரு ... என்ற
இன, மத, சாதிய அடையாளங்கள் தாண்டி
ஒரு குழந்தை என்னும்
எதார்த்தத்தினுள்ளே அடைபடவே
விரும்புகிறேன்!
முதலாய் காதல்
பூப்பதும்
முதல் காதல்
மணமாலை சேர்வதும்
வரம் தான்...
காதலின்
அழகான
நினைவுகளை
ஒன்றாய் கோர்த்த
பூ மாலையோடு
அவளும் அவனும்...
அவள் மனம்
எண்ணியபடி
மணமேடை
அவனோடு...
எண்ணம் எல்லாம்
எண்ணற்ற கனவின்
அலை வீச...
மனம் விட்டு
அவனோடு
அவள் பேச
இனி யொரு
தடையில்லை...
ஈடில்லா இன்பம்
காண
இணையோடு
இரவோடு
இனி அவள்
அவனோடு...
அவளின்
முகம்
சிவக்க
அவன் கை
அவள் இடை
அணைக்க...
அவன்
தழுவலில்
அவள் தனை இழக்க
காதல் மிதக்க
கொஞ்சம் காமம்
கலக்க...
முதல் முத்தம்
பதித்தான் அவன்..
அவள்
பூவிதழ் சேர்த்து...
அதிகாலை
அவள் முகம் பார்த்தே அவன் விழித்தான்..
வாழ்க்கை சொல்லும்
பாடம்
இதுவரை
படித்ததில் இல்லை...
பிடித்ததை
நாடுவதை விட
நம்மை நாடுவதை
பிடித்து நடப்பதே
வாழ்வதன் சிறப்பு...
வழியும் நீரை
மறைக்க
புன்னகையே
முகமூடி
நம்மில் பலருக்கு...
வாழ் நாள்
எல்லாம்
வாள் வீசும்
துன்பத்தை
எதிர்த்து
அதை
கையில் எடுத்து
ஓடுவதில் தான்
பேரின்பம்...
அன்பாய்
பழகிய
முகமும்
ஆசையாய்
பேசிடும்
வார்த்தையும்
அலைபேசியில்
நிறைவடையும்
வாழ்க்கை
வாழ்கையில்
எங்கே ?
எப்படி??
புரிந்து
பிரியம் வைப்பது...
ஆடம்பரமோ
அரை வயிரோ
இதுவோ ,
எதுவோ ,
நம் ஓட்டம் மட்டும்
பம்பரம் போல்
சுழல் கிறதே...
நிற்காமல் ஓடி
நிலையற்ற
சுகம
நான் போன பாதைகளில்
நதியாக உன் பயணம்..
பூக்களற்ற என் சாலைகளில்
புன்னகையின் வாசம் சேர்த்தடி
உன் பயணம்...
காய்ந்துபோன சருகெனக்கு
வசந்தம் தந்தது உன் பயணம்..
கானல் நீரான
என் பாதையில்
கங்கை பாய்த்ததடி
உன் பயணம்..
பூங்காற்றே கேளடி
என் காதலின்
சுவாசம் நீயடி...
வெண்ணிலவே கொஞ்சம் பாரடி
என் இரவின் விடியல்
நினதடி...
உயிரே
உன் கைகள் கோர்த்தே
எனை கூட்டிசெல்வாயோடி
ஆளே இல்லா
வெகு தூரம்
மீண்டுமொரு புதுப் பயணம்....
தூங்கி கிடந்த தமிழன் வீரம்
துள்ளி குதித்த நேரமது..!
தூசி படிந்த தமிழன் மானம்
தூய்மையான காலமது..!
ஓங்கி ஒலித்த தமிழன் சத்தம்
ஓசோன் தாண்டியும் கேட்டது..!
ஒன்று பட்ட தமிழினம் கண்டு
ஒவ்வொரு நாடும் வியந்தது..!
மழழை மொழி மாறாத
மண்ணின் வருங்கால செல்வங்கள்
மழை பனி பாராமல்
மலையாய் நின்று போராடினர்..!
கழனி வயல் கானாத
கணினி உலக தமிழரும்
இமை துளியும் அசராமல்
இரவு பகலாய் போராடினர்..!
அண்ணன் தங்கை உறவாக
அன்பு பொழியும் அன்னையாக
அனைத்து பெண்களுக்கும் மதிப்பளித்து
அறம் சிறக்க போராடினர்..!
கருவே சுமந்த கர்ப்பிணியும்
களத்தில் நின்று போராட
கயவராய் தெரிந்த காவலரும்
கனிவு நிறைந்த உள
சிறகை இழந்த
சிந்தனை பறவை
சிறையில் சிக்கி தவித்திருந்தேன்..!
கரைகள் நிறைந்த
கயவர் மத்தியில்
கைதி போலவே வாழ்ந்திருந்தேன்..!
ஆயிரம் கவலை அனுதினமும்
அனலை போல எனை சுற்றி..!
வாயே திறந்து புலம்ப கூட
வாய்ப்பில்லாத வாழ்வு எனக்கு..!
சொந்தமென்று பலர் இருந்தும்
சோகம் மட்டுமே என் சொந்தம்..!
வசதி வளங்கள் கூட இருந்தும்
வறுமையாகவே என் நாட்கள்..!
கருணை இல்லாத ஒருவனே
கடவுள் எனக்கு துணையாக்கினான்..!
நீரில் மூழ்கிய தாமரையை
தீயில் போட்ட கொடுமைதான்..!
அன்பை அறியா மிருகத்தின்
அதிகாரங்கள் என் மீது..!
அடைமழையில் காகித கப்பல்
அழகு பயணம் சாத்தியமா..!
கண்ணீர் அருவி தினம் வரவே
என்னில் ஒர
நான் பேசுவேன்.. என நீயும்
நீ பேசுவாய்.. என நானும்
இப்படியாக நம் கண்கள்
பேசிகொண்டிருந்த காலங்களில்
கண்ணுக்கே தெரியாத தூசியால்
உன் கண்கள் கலங்கியபோது
என் இதயம் கலங்கியது..
அந்த தூசிக்கு
இருக்கும் வலிமைகூட
என் இதயத்திற்கு இல்லாமல்!!..
சகியே
நீதானடி
என் உயிர் வாழ்கிறாய்..
அழகே நீயேயடி
என் உயிர் ஆழ்கிறாய்...
கொஞ்சும் கண்ணே
கொஞ்சல் பெண்ணே
கொஞ்சம் கண் பாரடி
நெஞ்சம் எல்லாம் நீயடி..
கொள்ளை அழகில்
கொள்ளை கொள்ளும்
கொள்ளைக் காரியே,
நாளும் இங்கே
நானும் வாழ
நீ தேவையே
அழகே நீயே என்
தேவதையே....
மெலிதாய் ஒரு பார்வை பார்த்து
இனிதாய் சிறு புன்னகை சேர்த்து
அழகாய் நம் கைகள் கோர்த்து
நடந்தே சென்றால்
ஊரின் கண்கள் படாதோ
நம் மீது...
தேடிச் சென்றேன் பெண்ணே
என் வாழ்வை நானிங்கே...
தேடக்கண்டேன் உன்னை
என் வாழ்வாய் நானின்றே...
நீதனாடி என் உயிரானவள்
நான் தானடி
பெண்ணே உனக்கானவன்....
உயிரோடு கலந்த
தனிமையின் தவிப்பிலிருந்து
தனை கொஞ்சம் மீட்க
ஓர் உயிரேனும்
உறவாக வருமா
என்ற ஏக்கத்தோடு
வழியோரத்தில்
விழியோரம் ஈரமாய்
வாழ்வதும் மனித இனமே ..
அதைக் கண்டும்
காணாமல் போவதுதான்
இன்று மனித குணமே....!
ஓடிச்சென்று
உதவி செய்த
உணர்விங்கே காணாமற் போனது ..
ஒதுங்கி நின்று
வேடிக்கை பார்த்தலே
இன்று உயர்வென்று ஆனது!!
மனிதனே நீ
சாதி எனும் சக்கரத்தை
மதம் என்னும் தேரில் பூட்டி
மனிதநேயமாகிய என்னை
மெல்ல மெல்ல
கொன்றேவிட்டாய்!!
ஒருநாளும் இனி நீ
எனைத்தேடி வரப்போவதில்லை ..
உனக்குத் தேவைப்படும்
வேளையிலே நான்
வந்தாலும் அதை
ஏற்றுக்கொள்ள நீ , துணிவதில்ல
உறவுகளைத் தொலைத்து
எங்கே போகிறோம்?
உணர்வுகளை மதிப்பதில் நாம்
தவறிழைக்கிறோம் !!
யாரோ போல
பார்த்து போகிறோம்..
கேட்டால் ,
நேரமில்லை என்று
ஒரே வரியிலே
பதிலைக் கூறிச்செல்கிறோம் ..
இருப்பது
ஒரே வாழ்க்கை
இதில் ஏனோ
இதனை மாற்றம் ,?
பிறந்தது முதல்
இறந்திடும் வரை
நாம் ஓட வேண்டிய
தூரமும், நேரமும்
நீண்டு கொண்டேதான்
செல்கிறது..
உயிரான உறவும்
உறவுகளின் உணர்வும்
உன்னதமானது !
அவைகளை மதிப்பதில்
அலட்சியம் வேண்டாமே ...
உணர்வற்ற பணத்திற்கு
தரும் மதிப்பில்
சற்றேனும்
உணர்வுள்ள மனதிற்கு தரலாமே...
புரிந்துகொள்
மனித வாழ்க்கை
ஒரே முறைதான்.....
கலையாத நீண்டதொரு
கனவு கண்டேன் ..
விழி திறந்தேன்
வியந்து நின்றேன் !
பார்க்கும் யாவும் அழகாக
துயரம் கலைத்திட்ட
மௌனம் உணர்ந்தேன் ..
யாருமே இல்லை
என்னை சுற்றி
ஆயினும் ,
துளிகூட பாரமில்லை ...
பதறாமல் புரிந்து நின்றேன் !
நான் இறந்துவிட்டேன்!!
நிம்மதியான அமைதி தருவது
மரணம் மட்டுந்தான் ...
வாழவேண்டும் நான்
உன்னோடு ..
வாழும்நாள் யாவுமே
உன் நினைவோடு..
கண்கள்மூட நான்
நீ கவிபாடு ..
காத்திருக்கிறேன் மண்மீது
காதல் கொண்டதோ உன்மீது..
துடிக்கும் என்
நெஞ்சமும்,
இமைக்கும் இரு
விழிகளும் ,
உனைக் காணப்போவது எப்போது?
வழி ,
போகும் போக்கிலே
என் நாள்போக
எந்நாள் வாழும் பொழுதுகள்
உனதாக,
மனதோடு ஊடுருவும்
உன் காதல் மெல்ல,
கண்கள் தனைமறந்து
நாணம்கொள்ள ,
என் பெண்மைதன்
காதல் எண்ணி
பெருமிதம் கொள்ளும்
உன்னாலே என் உயிரே....
"பகலவன்பாற் காதல் கொண்ட
நிலவவளின் ஆசை மொழிகள்........."