என் பாதையில் உனது பயணம்

நான் போன பாதைகளில்
நதியாக உன் பயணம்..

பூக்களற்ற என் சாலைகளில்
புன்னகையின் வாசம் சேர்த்தடி
உன் பயணம்...

காய்ந்துபோன சருகெனக்கு
வசந்தம் தந்தது உன் பயணம்..

கானல் நீரான
என் பாதையில்
கங்கை பாய்த்ததடி
உன் பயணம்..

பூங்காற்றே கேளடி
என் காதலின்
சுவாசம் நீயடி...

வெண்ணிலவே கொஞ்சம் பாரடி
என் இரவின் விடியல்
நினதடி...

உயிரே
உன் கைகள் கோர்த்தே
எனை கூட்டிசெல்வாயோடி
ஆளே இல்லா
வெகு தூரம்
மீண்டுமொரு புதுப் பயணம்....

எழுதியவர் : Karthika kani (KK) (14-Nov-23, 7:09 pm)
சேர்த்தது : Karthika kani KK
பார்வை : 221

சிறந்த கவிதைகள்

மேலே