இரத்த சாட்சி நண்பர்களே

ஊர் பட்னி பஞ்சம் நீங்க
எடக்கு மடக்கா நாலு வசனம்
அங்கிட்டுயிங்கிட்டு கைய காலயாட்டி
கொள்ளையடிச்சவன அடிக்க
கும்கும் கராத்தே குத்து சண்ட
டூம்டீம் டுஸ்புஸ் அவ்வளவு தான்
மூணரை மணிக்கூர் திரையில் காட்டினா எங்கலே தீர்ந்தது
ஊர் பஞ்சம் பசியினு கேட்ட
200 கோடி பத்தலேன்னு
நண்பா! அழுவுறான் ஹீரோ

நேரடி காட்சியில அஞ்சு வருஷம் போதுமான்னு முக்கி முனுங்கி
ஊர் பசி பஞ்சம் தீர்கரேன்னு
டவுசர துவைக்க வேலைக்காரன
வேணமின்னு ஊர்ல ஆள் தேடி அலயும் அரசியல் சீவகன்
மேட போட்டு கூத்து ஆடி
கூட்டம் கூட வெச்சாரு வெள்ளாட்ட
பசி பஞ்சம் தீத்தார ஊர்ல
பானர் கட்ட துணி பத்தாதுண்ணு
நண்பா! ஏழை கோமணத்தில
குறி வைக்கிறாரு

அரசியல்வாதியும் துறவியும் ஹீரோவும்
குளுகுளு காருல கூடவே பேசிகின்னு செல் போண்ணில
பிச்சகாரன் தட்டுல ஓட்ட போட
என்ன வழியிண்ணு
என்கிட்ட கேக்கானின்னு
சொன்னார் உண்மையை
மரத்தடி குறி சோசியர்
விவசாயி ஏழை கண்ணில மண்ணை தூவ கும்பல் இறங்கியிருக்கிறார்கள்
ஜாக்கிரதை ....
என்னவாகும் நம் தேசம்
இரத்த சாட்சி நண்பர்களை
நினைத்து பார்க்கையில்
தேசப்பற்று வரலாறு புத்தகத்தில்
........

எழுதியவர் : Rsk தென்றல் (5-Nov-23, 11:45 pm)
சேர்த்தது : rskthentral
பார்வை : 119

மேலே