உயிர் தோழன்
ஒரு நேரம் உணவு
இல்லையேல்
இருள் சூளும் கண்களின்
வெளிச்சம் விவசாயி
பால் அருந்தும் குழந்தையின்
தாய்க்கு தாயானான்
உயிர்களின் தாயாவான்
உயிர்காக்கும் மருத்துவரின்
உயிர் செழிக்க
உழைப்பவன் விவசாயி
எத்தனை பணமிருந்தும்
கடன் படுகிறோம்
நன்றி பாராது
என்னை வளமாக்கும்
என்முன் இருக்கும்
அறுசுவை உணவு
விவசாயி உழைப்பு
விதைகள் தூங்கமலிருக்க
விவசாயம் தூங்காமலிருக்க
பசுமை எங்கும் நிறைய
எத்தனை உழைத்தும்
ஏழ்மை சுமக்கும் விவசாயி
வறண்ட பாலை வனமாய்
பிறர் உயிர் உடல் அழகாகத்
தன் அழகை பாராமல்
வெயிலில் காய்ந்து
உலக அழகி உலக அழகன்
போட்டியில் சேரமுடியாமல்
அவனும் துணைவியும்
தீபாவளி பொங்கல்
கொண்டாடி மகிழவைக்கும்
இனிய பண்டம் விவசாயி
அவன் குழந்தை அழுதால்
மகிழ வைக்க முடியாமல்
சுருக்குபையுடன்
சுருங்கிய வயிருடன்
வருத்தத்துடன் இன்றும்
ஏக்கத்துடன் விவசாயி
நாட்டிற்கு சேவை செய்தும்
ஓய்வூதியம் இல்லாமல்
திண்டாடும் விவசாயி
கொண்டாடும் பிறரால்
உயிர் தோழன் என்று