இனமின்றி தேடும் நட்பு

உயிரை தேட
உயிர் காணவே
உயிரும் நானும்
சேர்ந்தது தான்
உயிர் நண்பன்

ஜனனம் உயிரை தேடல்
ஜடம் உயிர் நீக்கல்

ஜனனம் எடுப்பதுவும்
ஜடமாவதும்
இரு பாலிற்கும்

ஆணும் பெண்ணும்
இருவரிடம் இருப்பதும்
உயிர் என்று தோணல்

உடலில் அல்லாத
உணர்வில் என்றால்
உள்ளத்தில் என்றால்

ஆண் பெண் நட்பு
புனிதமென்று முதலில்
தோன்றுவதற்கு சிறந்த
உதாரணம்..

ஒரு தாயிடம் மகனுக்கும்
ஒரு தந்தையிடம் மகளுக்கும்

புரிதல் இருந்தால்
புனிதமான நட்பு
ஆணிடம் பெண் கொள்ளும்
நட்பு

ஆண் பெண் உறவு
நட்பாகாது என்று
சமூகம் கூற தயங்குவதன்
காரணம் என்ன???
தப்பாய் நினைக்கும்
சமுதாய மக்களிடம்

சொல்லடா என்
உயிர் நண்பா..

நட்பு என்பது
உயிர் தேடும் இரையாம்
உடல் தேடும் இரையல்ல
என்று . ....

இது ஒரு முறை அல்ல
இரு முறை அல்ல
பல முறை
மீண்டும் மீண்டும்
பல முறை

நட்பு என்பது
உயிர் தேடும் இரையாம்
உடல் தேடும் இரையல்ல
என்று....

பாலினம் பார்க்காது
உடலெடுக்கும் உயிராம்
நட்பின் விதை..

முளைக்க இரு உயிர்
ஆண் பெண் என்ற
பேதமின்றி பழகும் நட்பு
புனித மென்று சொல்லடா
என் உயிர் நண்பா.

ஜாதி ரெண்டு எனில்
மேல் ஜாதி மேலோங்கிய
எண்ணம் கொண்டவர்

அல்லாதவர் கீழ் ஜாதியினர்
இத்தகய தாழ்வு
மனப்பான்மையுடன்...
சீ....சீ... என்று கூறுபவர்

ஆண் பெண் நட்பை
புரிதல் கொண்ட சமூக
பார்வையாளர் நாம்
என்று
ஐயமின்றி கூறட
என் உயிர் நண்பா..

கொள்ளுதல் இங்ஙனம்
பாலியல் பேதமின்றி நட்பை கொண்டாடும் நண்பர்களுக்கு
ஈரடி குறள்
உயிர் தேடும் இறையாம்
இனமின்றி ( ஆண் பெண்) தேடும் உறவு நட்பு
வாழ்க !!!! வாழ்க!!!!
என் உயிர் நண்பர்களே!!!!

எழுதியவர் : Rak தென்றல் (29-Oct-23, 12:09 am)
சேர்த்தது : rskthentral
பார்வை : 223

மேலே