எது

எது உயர்வு தான்
எது தாழ்வு தான்
எது வாய்மை தான்
எது

போர் தொடுத்தாலும் என்ன
அடங்க வில்லை
அடங்கவில்லை
அஞ்சாமல் எழும் அலை
கவிதை தானே

பறை அடித்தாலும் என்ன
மிரள வில்லை
மிரள வில்லை
நடுங்காமல் மோதும் புயல்
இசை தானே

இரவை வெல்லும்
நிலவும் இங்கே
இரவை கொல்லும்
விடியல் இங்கே
இரவில் மின்னும்
மின்மினி இங்கே
இரவை தொடரும்
பகலும் இங்கே
எது உயர்வு தான்
எது தாழ்வு தான்
எது வாய்மை தான்
எது???...

தடைகளே பல நிற கொடிகளா
தலையே சுழலுதே
தனி மர பூமியா??

செத்து பிழைத்திட
அடிமை அல்ல நான்
அன்பின் சிகரமே
சுதந்திர சுகமே

கலங்கிடாதே நண்பா
நாளை நமதே
உயர்ந்திடாதோ எண்ணம்
உலகம் நமதே

விழித்திடாதோ மின்னல்
வானம் நமதே
தோன்றிடாதோ வரிகள்
கவிதை புதிதாய்..

எழுதியவர் : Rajeswari s Kumar (28-Oct-23, 3:21 pm)
சேர்த்தது : rskthentral
Tanglish : ethu
பார்வை : 96

மேலே