என்னவளே

சகியே
நீதானடி
என் உயிர் வாழ்கிறாய்..
அழகே நீயேயடி
என் உயிர் ஆழ்கிறாய்...

கொஞ்சும் கண்ணே
கொஞ்சல் பெண்ணே
கொஞ்சம் கண் பாரடி
நெஞ்சம் எல்லாம் நீயடி..

கொள்ளை அழகில்
கொள்ளை கொள்ளும்
கொள்ளைக் காரியே,
நாளும் இங்கே
நானும் வாழ
நீ தேவையே
அழகே நீயே என்
தேவதையே....

மெலிதாய் ஒரு பார்வை பார்த்து
இனிதாய் சிறு புன்னகை சேர்த்து
அழகாய் நம் கைகள் கோர்த்து
நடந்தே சென்றால்
ஊரின் கண்கள் படாதோ
நம் மீது...

தேடிச் சென்றேன் பெண்ணே
என் வாழ்வை நானிங்கே...
தேடக்கண்டேன் உன்னை
என் வாழ்வாய் நானின்றே...

நீதனாடி என் உயிரானவள்
நான் தானடி
பெண்ணே உனக்கானவன்....

எழுதியவர் : KK (13-Nov-23, 4:43 pm)
சேர்த்தது : Karthika kani KK
Tanglish : ennavale
பார்வை : 82

மேலே