என்மூச்சுக் காற்றை எடுத்துநீ சென்றுவிட்டாய் 2

என்மூச்சுக் காற்றை எடுத்துநீ சென்றுவிட்டாய்   2

பதிவான முதல் வடிவம் :
=====================

என்மூச்சுக் காற்றை எடுத்துநீ சென்றுவிட்டாய்
தென்றல் எனும்மென்மை காற்றில் கலந்துவிட்டாய்
உன்மூச்சுக் காற்றோடு உள்ளிழுக்கும் யோகினியே
என்மூச்சை தாநீ எனக்கு

யாப்புக் கருத்துரையாடல் :--
=========================
Dr.V.K.Kanniappan • 1 மணி நேரத்திற்கு முன்
காற்றோடு உள்ளிழுக்கும் - காற்றோ டுள்ளிழுக்கும் - தளை கெடும்.


எனது பதில்
கவின் சாரலன் • 20 நிமிடத்திற்கு முன்
மிகவும் சரி குற்றியலுகரம் புணர்ச்சிக்குப்பின் சீரமைக்க வேண்டும்

உன்மூச் சுடனெனதை உள்ளிழுக்கும் யோகினியே
----என்று அமைந்தால் தளை தட்டாது சீரமையும் மோனையும் பாதுகாக்கப்படும்
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி யாப்பு சார் சுட்டலுக்கு யாப்புப் பிரிய டாக்டர் VKK

டாக்டர் வி கே கன்னியப்பனார் சுட்டிக்காட்டியபடி மூன்றாம் அடி சீரமைக்கப்பட்ட
தளைதட்டா மோனையும் பாதுகாக்கப் பட்ட
இரண்டாம் வடிவம் :----
==================
என்மூச்சுக் காற்றை எடுத்துநீ சென்றுவிட்டாய்
தென்றல் எனும்மென்மை காற்றில் கலந்துவிட்டாய்
உன்மூச் சுடனெனதை உள்ளிழுக்கும் யோகினியே
என்மூச்சை தாநீ எனக்கு

எழுதியவர் : கவின் சாரலன் (13-Nov-23, 5:43 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 55

மேலே