கனவு
கலையாத நீண்டதொரு
கனவு கண்டேன் ..
விழி திறந்தேன்
வியந்து நின்றேன் !
பார்க்கும் யாவும் அழகாக
துயரம் கலைத்திட்ட
மௌனம் உணர்ந்தேன் ..
யாருமே இல்லை
என்னை சுற்றி
ஆயினும் ,
துளிகூட பாரமில்லை ...
பதறாமல் புரிந்து நின்றேன் !
நான் இறந்துவிட்டேன்!!
நிம்மதியான அமைதி தருவது
மரணம் மட்டுந்தான் ...