அப்பா

ஒரு தியாகி……
தன் சந்தோசத்தை
தொலைத்து……..
நமக்காக வாழ்க்கையை
தொடங்கியவர்,
எடுத்த அவதாரங்கள்,
நமக்கு முன்னோடியாக……..
தந்தை அவதாரம்……
நம்மை தோளில் தூக்கி தாலட்டும் போது!!!...
நம் கை கோர்த்து நடக்க கற்றுக் கொடுக்கும் போது!!!....
நம் சிரிப்புக்காக கோமாளியாக மாறும் போது!!!....
நம் ஆசையை நிறைவேற்றும் போது!!!...
இந்த அவதாரம்
எதுவும் அறியா குழந்தை பருவத்தில்….
வழிகாட்டி அவதாரம்…..
நம் வாழ்க்கையை நமக்காக செதுக்கும் போது!!!...
நம் அறியாமையை போக்கும் போது!!!...
நம் லட்சிய ஊற்றை வளர்க்கும் போது!!!...
இந்த அவதாரம்
பள்ளி பருவத்தில்…..
நண்பன் அவதாரம்…….
சோகத்தை பகிர்ந்து கொள்ளும் போது!!!..
சந்தோசத்தை இரட்டிப்பாக்கும் போது!!!...
வாழ்க்கையை வாழ கற்றுக் கொடுக்கும் போது!!!...
இந்த அவதாரம்
இளமை பருவத்தில்…..
இத்தனை அவதாரங்களும்….
தன் ஆசை, சந்தோசம்
அத்தனையும் தொலைத்தும்
நமக்காக…..
நமது சந்தோசத்துக்காக…
ஒரு கடவுள்…..
நாம் கடவுளை கண்டதில்லை…
எல்லோரும் கடவுளிடம் வரம் கேட்டால்???
நாம் அந்த கடவுளயே வரமாக கண்டோம்
நம் தந்தையாக…