ஜல்லிக்கட்டு வெற்றி

தூங்கி கிடந்த தமிழன் வீரம்
துள்ளி குதித்த நேரமது..!
தூசி படிந்த தமிழன் மானம்
தூய்மையான காலமது..!

ஓங்கி ஒலித்த தமிழன் சத்தம்
ஓசோன் தாண்டியும் கேட்டது..!
ஒன்று பட்ட தமிழினம் கண்டு
ஒவ்வொரு நாடும் வியந்தது..!

மழழை மொழி மாறாத
மண்ணின் வருங்கால செல்வங்கள்
மழை பனி பாராமல்
மலையாய் நின்று போராடினர்..!

கழனி வயல் கானாத
கணினி உலக தமிழரும்
இமை துளியும் அசராமல்
இரவு பகலாய் போராடினர்..!

அண்ணன் தங்கை உறவாக
அன்பு பொழியும் அன்னையாக
அனைத்து பெண்களுக்கும் மதிப்பளித்து
அறம் சிறக்க போராடினர்..!

கருவே சுமந்த கர்ப்பிணியும்
களத்தில் நின்று போராட
கயவராய் தெரிந்த காவலரும்
கனிவு நிறைந்த உள்ளமாகினர்..!

மதம் சாதி அரசியலால்
மதியிழந்த மக்கள் கூட்டம்
மண் பெருமை காக்க வேண்டி
மடை திறந்த வெள்ளமாகினர்..!

தடுக்க நினைத்த மத்திய அரசே
தண்டவாளத்தில் நிறுத்தி வைத்து
தமிழ் பற்று என்னவென்று
தாறுமாறாய் காட்டினர்..!

அடக்க நினைத்த அன்னிய நாயே
அகிம்சை வழியில் விரட்டி அடித்து
அழிவில் இருந்த விளையாட்டை
அழகு மாறமல் காப்பாற்றினர்..!

அழிவில் இருந்த விளையாட்டை
அழகு மாறமல் காப்பாற்றினர்..!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (5-Jan-18, 2:20 am)
Tanglish : jallikkattu vettri
பார்வை : 4353

மேலே