புரிந்து கொள்

உறவுகளைத் தொலைத்து
எங்கே போகிறோம்?
உணர்வுகளை மதிப்பதில் நாம்
தவறிழைக்கிறோம் !!

யாரோ போல
பார்த்து போகிறோம்..
கேட்டால் ,
நேரமில்லை என்று
ஒரே வரியிலே
பதிலைக் கூறிச்செல்கிறோம் ..

இருப்பது
ஒரே வாழ்க்கை
இதில் ஏனோ
இதனை மாற்றம் ,?

பிறந்தது முதல்
இறந்திடும் வரை
நாம் ஓட வேண்டிய
தூரமும், நேரமும்
நீண்டு கொண்டேதான்
செல்கிறது..

உயிரான உறவும்
உறவுகளின் உணர்வும்
உன்னதமானது !
அவைகளை மதிப்பதில்
அலட்சியம் வேண்டாமே ...

உணர்வற்ற பணத்திற்கு
தரும் மதிப்பில்
சற்றேனும்
உணர்வுள்ள மனதிற்கு தரலாமே...
புரிந்துகொள்
மனித வாழ்க்கை
ஒரே முறைதான்.....

எழுதியவர் : தமிழ் (3-Aug-17, 7:19 pm)
சேர்த்தது : Karthika kani KK
Tanglish : purindhu kol
பார்வை : 122

மேலே