பயமிகு உலகம்

அரசாங்கம் என்றாலே பயமாக உள்ளது படித்த மற்றும் படிப்பறிவில்லா மனிதர்களுக்கு...
நானும் ஒரு காலத்தில் இப்படிதான்...
அரசாங்கத்தைக் கண்டால் பயந்து வாழ்ந்து வந்தேன்...
ஆனால்,
அன்பென்னும் இறைவனின் அரசாட்சியை உணர்ந்தபின் எந்த அரசாங்கத்தைக் கண்டும் எனக்கு பயமில்லை...

அன்பாகிய இறைவன் என்னுள் ஒரு அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறான் மனசாட்சியாய்...
முடமான பயப்படும் மனிதர்கள் பயத்தை விட்டொழியுங்களே...

தன்மீதே தனக்கு சம்சயம் தோன்றிவிட்டால் கடவுளும் காப்பாற்றார்...
நீங்கள் கொண்ட அரசாங்கமும் அழிவை நோக்கி அழைத்துச் செல்லுமே...

தன்னில் நடக்கும் அரசாட்சியை அடையாளம் காணாத மனிதனுக்கே வெளிப்புற அரசாங்கமும், அதன் சட்டதிட்டங்களும் தேவை...

சுயாட்சி கொண்டோர் சூழ்ச்சியில் அகப்படார்...
மாயத்தில் மூழ்கி மயக்கமுறும் மடையராகார்...
இயற்கையின் வழியில் அறிவை மேம்படுத்தி இயற்கையோடு இணைந்து வாழ எந்த மானிட அரசாங்கமும் தேவையில்லை...
திருடனைப் பிடிக்கத் திருட்டு காவலனை நாடுவதே மூடத்தனம்...
இதில் பெருமை வேறு...
அன்றாட உழைப்பில் அவர்களுக்குக் கப்பங்கள் வேறு...
இப்படி பயங்களோடு வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கை...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (3-Aug-17, 6:46 pm)
பார்வை : 881

மேலே