மாயை உலகின் மனிதன் நிலையிதுவே

இறைவன் படைத்த உலகினிலே
இயங்கும் யாவரும் அவனடிமைகளே !
இட்டக் கட்டளை நிறைவேற்ற
இன்னல் வாழ்வில் இயங்குகின்றோம் !!

ஐம்பூதமும் ஓரணியில்
நவக்கோள்களும் மருவணியில்
வெல்வது யாரேனும் போராட்டம்
வேட்கைக்கு துணையாய் மனித இனம் !

களத்தில் நிறுத்திய வீரனாய்
காலம் நடத்தும் போராட்டம்
மனித இனங்கள் ஒருவருக்கொருவர்
மோதி மண்ணில் சாய்வதை
காட்சியாய் கடவுளும் காண்கின்றான்!!

ஐம்பூதம் அழித்திட ஓரணி !
ஐம்பூதம் காத்திட மறுவணி !
நவகிரகப் பிடியில் மனிதனெல்லாம்
அடிமைக்கோலம் பூண்டதை காண் !!

யார் யாரை தகர்ப்பதென்று
காலம் இடும் கட்டளைக்காக
காத்திருக்கும் காவலனாய்
செய்வதறியாது திகைக்கும் மனிதனொருபுரம்

இயற்கையெல்லாம் தகர்த்திடவே
தாக்குதல் தொடுத்திடும் நவக்கோளும்
தமக்கென மரித்திடும் மனிதனையே
படைத்திடும் தனித் தனியாய் ...

தீக்கோள் வலுவில் ஓரினம் !
நீர்க்கோள் வலுவில் ஓரினம் !
வாயுவின் வலுவில் ஓரினம் !
பூமியின் வலுவில் ஓரினம் !
வானமண்டல வலுவில் ஓரினம் !
படைத்தது மனிதனை நவக்கோளும் !!

ஐந்து பூதமும் விடவில்லை
அதுவும் தற்காத்துக்கொள்ளவே
பஞ்ச சக்தியாய் மனிதனைப் படைத்திடவே
எதிரும் புதிருமாய் ஓருயிர்கள்
எதுவும் அறியாமலே ...

சமமாய் இருவரும் இருக்கையிலே
சமரசம் செய்திட யாருமில்லை?!!
எல்லாம் நானறிவேனென்ற மனிதனுமே
பிறப்பிறப்பரியா தவிப்பது காண்
இறைவன் செய்த சூட்சுமமே !

முன்பே அறிந்தால் செயலேதும்
புரியாதென அறிந்தவன் ஆண்டவனே!
ஏவுகணையில் தீ வைத்து
சீறிப் பாய்வது போல்தான் மனிதனும்
சீறிப் பாய்ந்த சில மணியில்
சிதறிடுவோமென அறிந்திருந்தால்
சீரிப்பாய்ந்திட ஒருவரும் துணியேன் !!

வெற்றியை நோக்கி முன்னேறி
தோல்வியில் வாழ்வை முடிப்பதைக்காண்!
அறிந்தும் மனம் பின்வாங்கதிருக்க
அவ்வப்போது மாற்றம்தந்து
விரட்டி துரத்துது நவக்கோளும்!

உண்மை பொய்தோற்றம் புனைந்திட
பொய் மெய்தோற்றமுடன்
மாயை நிறைந்த உலகமிது !
வெற்றிக் கண்டவன் சித்தனாவான் !
ஏகாந்தம் பேசியோர் மேலும் மேலும்
மாயஉலகில் சிக்குண்டு தவிக்கிறான் !

முடிவுறும் போதே தெளிகிறான்!
முன்பே சொன்னால் மறுக்கிறான் !!
எனதாய் எல்லாம் ஆகிடுமென்றே
விறைப்பாய் சென்ற மனிதனும் தான்
விதியறியாது மண்ணில் புதையுண்டான் !!

நவக்கோள் நடத்தும் நாடகத்தில்
நாம் நாளொருனாலாய் ஓர் வேடமிட்டு
நன்மையும் தீமையும் செய்கின்றோம்
நம்பிக்கையென நடிக்கின்றோம் !!

வேஷம் கலையும் நாள்வரும்போது
வேடிக்கையாக அழுகின்றோம் !
வேதம் படித்தவனும் கூட
வேதனைப் படுவதைக் காண் !!

மாயை உலகு எல்லாம் முன்பே தீர்மானம்!!
நாம் வென்றதாக தினம் எண்ணி
வாழ்வை வென்றவர் யாருமில்லை
வாழ்க்கை சித்தாந்ததில் யாவரும் நடிகர்களே !

எழுதியவர் : கனகரத்தினம் (18-May-14, 5:40 pm)
பார்வை : 118

மேலே