மே 18
போர்தான் முடிந்தது
பார்தான் என்ன
அழிந்து விட்டதா?
பார் என்னை
ஒளிந்து விட்டேனா?
முள்ளி வாய்க்காலில்
கொள்ளி வைத்தாய்
சொல்லி வைத்தால் போல்
கிள்ளி எறிய
அள்ளி வருவோம்
தோள்மீது சுமந்தது
தோல்வியல்ல
சமயத்தில் தோள்கொடுக்கும்
வேள்வி
நாடிக்குள் ஓடிய குருதி
நீருக்குள் வடிந்தது
குருதி நாட்டம் உள்ள உனக்கு
குருதி நாற்றம் காட்டுவோம்
இறுதி ஓட்டம் எடுக்கும்வரை.
தமிழனுக்கும் நெஞ்சமுண்டு
குத்திக் கிழிக்க நினைத்தால்
கத்தியைக் குழிக்கும்
சுத்திக் களிக்க நினைத்தால்
உயிரையும் கொடுக்கும்.