mathumathi - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : mathumathi |
இடம் | : colombo |
பிறந்த தேதி | : 01-Jan-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 581 |
புள்ளி | : 155 |
தமிழுக்கு மது(தேன்) என்று பெயர்
இம்மாத அகலுக்கான எனது கவிதை
புவியீர்ப்பு விசை
பலம், பலவீனம்
மின்காந்தம், ஈர்ப்பு
அண்டத்தை கொண்டுசெல்லும்
அடிப்படை விசைகள்
நியுற்றனோடு சேர்ந்துகொண்டு
ஈர்ப்பை விசையென்கிறார்கள்
ஐன்ஸ்டைனோடு சேர்ந்துகொண்டு
வெளிநேர வளைவென்கிறார்கள்
ஈர்ப்பு ஒருவகைக் கவர்ச்சிதான்
துகள்களில் நிகழ்வதில்லை
ஈர்ப்பு ஒருவகை இழுவைதான்
கோள்களில் அகல்வதில்லை
மாற்றந்தான் உலகில்
மாறாதது என்ற
மாற்றானின் மடத்தனத்தை
நாமும் நம்பிவிட்டோம்
மாற்றந் தவிர்ந்த மாறாதவை
இருக்கத்தான் செய்கின்றன
ஈர்ப்பு என்பதை யாராலும்
மாற்றவே முடியாது
நான்கு விசையிலும்
பலவீனமானது ஈர்ப்பு
நான்குமே செய்யாததை
செய்வதும் ஈ
உலகத்தில் எல்லாப் பொருட்களும்
கடிகாரம்தான்
நேரத்துக்குக் காட்டும் மாற்றம்
தானே கடிகாரம்!
தென்னை மெதுவாக வளர்வதும்
கடிகாரம்தான்
காவோலை விழுந்த அச்சும்
கடிகாரம்தான்
பூப்பதும் காய்ப்பதும் முதிர்வதும்
உதிர்வதும்
கோடை வசந்தம் மாரி இலையுதிரென்ற
வருடக் கடிகாரம் தானே.
ஒவ்வொரு பொருளின் நிழலும்
பகலில் நேரம் காட்டும்
ஒவ்வொரு பொருளின் குளிரும்
இரவில் நேரம் காட்டும்
தாளம் பாடல் கேட்டால்
குழந்தைக் காலம் வரும்
ஒவ்வொரு பாட்டிலும் மனிதன்
காலத்தை கணக்கிடவே செய்வான்
எவ்வளவு துருப்பிடித்தது என்பதில்
உலோகக் காலம் கணிக்கப்படும்
எவ்வளவு கதிர்த்தது என்பதில்
இறப்புக் காலம் கணிக்
எனக்குத் தாகமாக இருக்கிறது
தண்ணீர் வேண்டும்.
எனக்குக் காமமாக இருக்கிறது
காதல் வேண்டும்.
உலகில் சொல்லப்பட்ட பெரும்பொய்
”உன்னை நான் காதலிக்கிறேன்”
உலகில் மறைக்கப்பட்ட பெரும்”மெய்”
உன்னை நான் காமமிக்கிறேன்
உள்ளுக்குள் ஏதோ நடப்பதை
காதல் என்றால் அது நியாயம்
வெளியில் ஏதேதோ நடப்பதை
காதல் என்றால் அது நியாயமா?
கடற்கரைகள், பின் ஆசனங்கள்
பூங்காக்கள் பொது இடங்கள்
இன்னும் வயதுக்கே வராத
சோடிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது
காதலென்ற பெயரில் கள்ள உறவுகள்
பகிரங்கமாகச் சுற்றித் திரிய
சட்டபூர்வமான திருமண உறவுகள்
வீடுகட்டி பதுங்கி வாழ்கின்றன
காசு கொடுத்து மறைவான அறைக்குள்
தெரியாமல் செய்தா
வீரப் பயம்
மடித்துக் கட்டிய வேட்டிக்குள்ளும்
துடித்து முறுக்கும் மீசைக்குள்ளும்
பத்திரமாகப் பதுங்கி இருக்கிறது
ஆண்களின் வீரம் எல்லாம்
நேர்மையாக உழைப்பது தானே
ஆண்களின் சுத்த வீரம்
யாரையும் ஏமாற்றி உழைக்காத
வீரதீரன் இங்கே யார்
உண்மையாக நடப்பது தானே
ஆண்களின் சுத்த வீரம்
மனைவிக்குப் பயந்து பொய்சொல்லாத
வீரதீரன் இங்கே யார்
எதற்கும் பயப்படாதவன் வீரனென்று
சொல்லித் தந்தது யார்
பயப்படும் ஆண்மகன்தான் உண்மையில்
பயன்படும் வீரனாக மாறுகிறான்
எமாற்றுக்குப் பயப்படும் மனிதன்
வியாபாரத்தில் வீரன் ஆகிறான்
பொய்சொல்லப் பயப்படும் மனிதன்
குடும்பத்தில் வீரன் ஆகிறான்
சில பயங்
பாம்புக்கு இரண்டு நாக்கு இருந்தாலும்
வீம்புக்குப் பேசுவதில்லை
ஒத்த நாக்கின் சித்தப்படியே
மொத்தக் குழப்பமும் மனிதனில்
பிளவு பட்டும் நாகநாக்கு இனத்துக்கு
நலவு கெட்டதில்லை
தனிப் பட்ட மனிதநாக்கு தன்னினத்தை
பிளவை விட்டு பிரித்ததில்லை
மூக்களவு நாக்கு நீளும் மாடுகூட
வாக்குத் தராமலே பால்தரும்
உதட்டோடு நின்று விட்டதால் மனிதனாக்கு
வாக்கும் கூட உதட்டளவில்தான்
வார்த்தைக்கு பஞ்சம்வைக்காத நாக்கு
நெஞ்சத்தில் வஞ்சம் வைக்கும்
அர்த்தத்தை இரட்டிப்பாக்கும் நாக்கு
வருத்தத்தில் உருட்டிப்பார்க்கும்
புரள்வதற்கு ஏற்றாற்போல் நாக்கில்
திரள்வது சொல்
உதட்டுக்கு பதட்டங்கொடுத்து வாக்கால்
ஒத்த உளறல்களின் ஒலிப்பிழம்பு
புரளும் நாவில் திரண்டு
அங்கீகார உச்சரிப்பில் மொழியானது
ஒலி செல்லும் இழி தூரம்
கடந்து மொழி செல்ல
வரியை வாரிக்கொண்டது ஒலி
ஒலிக்கும் வரிக்கும் பிறந்த
மொழிக்கெல்லாம்
தாயும் தயவுமானது தமிழ்
மெய்யில் உயிரோடும் முதலெழுத்து
மையில் வரியாகும்
தலையெழுத்தில்
உயிர்மெய் பயிராகும்
சார்பெழுத்தாய்
தழைக்கனும் மொழிவெறியில் இலக்கணம்
இழக்கனும் மொழிவெறித் தலைக்கனம்
திளைக்கனும் தேனமுதில் ஒருகணம்
எதுகையில் மோனை வைத்துப் பார்த்தேன்
பொதிகையில் மீனை வைப்பது
போல
கண்டதாள்களில் எழுத்தை வைத்துப்
பார்த்தேன்
தண்டவாளத்தில் கழுத்தை வைப்பது
போல
பேனாமையில் சிந்தனை வைத்துப்
பார்த்தேன்
காணாமையில் கந்தனைப் பார்ப்பவர்
போல
புரிபவர்கள் புரிந்து கொண்டு போனார்கள்
புரியாதோர் பிரிந்து கொண்டு போனார்கள்
அறியாமையில் இருப்பவன்தான்
நஷ்டத்தில் சந்தோசப்படுகிறான்
கல்லடி வாங்கியும் பைத்தியக்காரன் சிரிப்பதைப் போல
புரியாமல் எழுதிவிட்டுத் தனியாகச்
சிரிக்கிறேன்
தெரியாமல் திட்டுவாங்கிய பைத்தியக்காரி
போல
என்கவிதை புரிந்தவர்கள் ரசித்து
மகிழ்கிறார்கள்
என்கவிதைப் புரியாதவர்கள் தூசித்து
நல்லது என்று விளங்கியவை எல்லாம்
நல்லதாய் இருந்ததில்லை
நல்லதாய் இருக்க வேண்டியது கூட
நல்லதாய் இருந்ததில்லை
இருளுக்குப் பயப்படாதவன் எவனுமில்லை
பயப்படத் தகுதியானது இருளும் இல்லை
இருள் உன்னை மறைத்துக் கொள்கிறது
ஒளியோ உன்னைக் காட்டிக் கொடுக்கிறது
ஆரம்பமாய் ஆதிமுதல் இருப்பது இருள்
அத்துமீறி அடக்குமுறையில் நுழைவதே ஒளி
முதல்குடி நானென்றும்
வந்தேறி நீயென்றும்
பிரதேசவாதம் பேசிடுமா இருள்?
விட்டுக்கொடுப்பென்றால் அது இருள்தான்
தொட்டுக்கொள்ள ஒளிக்கு இடம் கொடுக்க
நிழலென்று தூரம் துரத்திவிட்டது இருளை
பொறுமைக்கு இலக்கணம் பூமியல்ல
ஒளி மறையும்வரை பொறுத்திருக்கும்
இருள்தான் பொறுமைசாலி
நண்பர்கள் (54)

வேலு
சென்னை (திருவண்ணாமலை)

சேகர்
Pollachi / Denmark

டார்வின் ஜேம்ஸ்
திண்டுக்கல்

சீனி அலி இப்ராஹிம்,
பெரியபட்டினம்.
