mathumathi- கருத்துகள்

உங்கள் பாராட்டுக்கு என்னிடம் தனியிடம் உண்டு.

சிலது புரியவில்லை என்று சிலர் கூறியதால் இவ்விளக்கம்.

ஒலி செல்லும் இழி தூரம்
கடந்து மொழி செல்ல
வரியை வாரிக்கொண்டது ஒலி

எவ்வளவு கத்திப் பேசினாலும் ஒலி ஒரு குறித்த தூரத்துக்கு மேல் செல்லாது. ஒலி கேட்கும் கடைசித் தூரத்துக்கு அப்பாலும் நாம் பேசுவது கேட்க வேண்டும் என்றால் அது கடிதம் போன்ற வரி வடிவத்துக்கே சாத்தியம்.

ஒலிக்கும் வரிக்கும் பிறந்த
மொழிக்கெல்லாம்
தாயும் தயவுமானது தமிழ்

மொழி பூரணம் அடைய ஒலி வடிவமும் தேவை. வரி வடிவமும் தேவை. சில மொழிகள் இன்று ஏடுகளில் வரி வடிவமாக மட்டுமே இருக்கிறது. யாரும் அதைப் பேசுவது இல்லை. சில மொழிகள் பேசப்படுகிறது. ஆனால் அவற்றுக்கு எழுத்து இல்லை.

ஒலியும் வரியும் கொண்ட மொழிகளுக்கெல்லாம் ஆரம்பத் தாய் மொழி தமிழ். தாய் என்றாலே அதன் தயவின்றி மற்றைய சேய் மொழிகள் உருவாக முடியாது.

எனவே தான் தாயும் தயவும் என்றேன்.

தழைக்கனும் மொழிவெறியில் இலக்கணம்
இழக்கனும் மொழிவெறித் தலைக்கனம்

மொழி வெறி என்பது தப்பல்ல. அந்த வெறியால் இலக்கணம் தழைத்து ஓங்கும் என்றால் மொழி வெறி தப்பல்ல.

மொழி வெறி தப்பு. வெறியால் தலைக்கனம் தற்பெருமை வரும் என்றால் அம்மொழி வெறி தப்பு.

கருந்துளை ஏன் ஓவர்

போற்றிய இருவருக்கும் நன்றி. எப்போதும் இவ்விருவரும் என்னை அவதாநிப்பதட்கும் நன்றி

கடைசியில் வேறு வழி இல்லாத போது தான் தத்துவம் எல்லாம் வருமாம்

அதற்குத்தான் நான் தோற்கிறேன்

இக்கவிதையில் நான் ரசித்த வரிகளும் இவைதான். இக்கருவை வைத்துத்தான் அறிவு என்றால் என்ன என்று எனக்கு சிந்திக்கத் தோன்றியது. உங்கள் புரிவுக்கு நன்றி பழனி

நிறையவே சொல்லிட்டிங்க. Nandri

ஒவ்வொரு சொல்லும் மல்லுக்கு நிற்கிறது. பல்லாக்கில் ஏறி மல்லாக்க விழுகிறது. படம் போட்டுப் பாடப் புத்தகத்தில் புடம் போடவேண்டிய கவிதை.


mathumathi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே