இலக்கணம்

ஒத்த உளறல்களின் ஒலிப்பிழம்பு
புரளும் நாவில் திரண்டு
அங்கீகார உச்சரிப்பில் மொழியானது

ஒலி செல்லும் இழி தூரம்
கடந்து மொழி செல்ல
வரியை வாரிக்கொண்டது ஒலி

ஒலிக்கும் வரிக்கும் பிறந்த
மொழிக்கெல்லாம்
தாயும் தயவுமானது தமிழ்

மெய்யில் உயிரோடும் முதலெழுத்து
மையில் வரியாகும்
தலையெழுத்தில்
உயிர்மெய் பயிராகும்
சார்பெழுத்தாய்

தழைக்கனும் மொழிவெறியில் இலக்கணம்
இழக்கனும் மொழிவெறித் தலைக்கனம்
திளைக்கனும் தேனமுதில் ஒருகணம்

எழுதியவர் : மது மதி (18-Aug-14, 7:37 pm)
Tanglish : ilakkanam
பார்வை : 211

மேலே