புரியாத மகிழ்ச்சி

எதுகையில் மோனை வைத்துப் பார்த்தேன்
பொதிகையில் மீனை வைப்பது
போல

கண்டதாள்களில் எழுத்தை வைத்துப்
பார்த்தேன்
தண்டவாளத்தில் கழுத்தை வைப்பது
போல

பேனாமையில் சிந்தனை வைத்துப்
பார்த்தேன்
காணாமையில் கந்தனைப் பார்ப்பவர்
போல

புரிபவர்கள் புரிந்து கொண்டு போனார்கள்
புரியாதோர் பிரிந்து கொண்டு போனார்கள்

அறியாமையில் இருப்பவன்தான்
நஷ்டத்தில் சந்தோசப்படுகிறான்
கல்லடி வாங்கியும் பைத்தியக்காரன் சிரிப்பதைப் போல

புரியாமல் எழுதிவிட்டுத் தனியாகச்
சிரிக்கிறேன்
தெரியாமல் திட்டுவாங்கிய பைத்தியக்காரி
போல

என்கவிதை புரிந்தவர்கள் ரசித்து
மகிழ்கிறார்கள்
என்கவிதைப் புரியாதவர்கள் தூசித்து
மகிழ்கிறார்கள்

எப்படியோ வாசகர்களுக்கு நான்
கொடுப்பது மகிழ்ச்சி
எப்படி ஏசுபவர்களுக்கும் நான்
கொடுப்பது மகிழ்ச்சி

எழுதியவர் : மது மதி (14-Jul-14, 4:25 am)
பார்வை : 107

மேலே