விடை வினா
விடைகள் தான் உலகத்தில் ஆரம்பம்
ஆங்காங்கே கண்கள் காண்பது விடைகளை
புரியாத விடைகள் தெரியும் போது
புரிந்து கொள்ள கேள்வி பிறக்கிறது
அப்பிள் பழம் கீழே விழுந்தது விடை
நியுற்றனுக்கு அதனால் பிறந்தது வினா
வினாக்களில் கிடைக்கும் விடையை விட
விடைகளில் பிறக்கும் வினா உயர்ந்தது