பாட்டி வடை போட்டு உடை

வடை சுடும் வாடை
காக்கை
மூக்கைத் துளைத்தது

சுட்ட வடைக்கு கிட்ட
வந்து
தட்டிச் சென்றது

கிளைத்த மரத்தில் களைத்த
காகம்
நிலைத்து நின்றது

உழைத்த பாட்டி கலைத்துப்
பார்க்க
பிழைத்துப் போனது

தெரிய வந்த நரியில்
ஒன்று
திட்டம் போட்டது

கருமைக் காகம் பெருமை
சொல்லி
அருமை என்றது

இனிக்கும் குரலில் தொனிக்கும்
பாடல்
படிக்கப் பணித்தது

காக்கை நரியின் வாக்கை
நம்பி
நாக்கை அசைத்தது

ஏந்திய வடையோ வாந்தியைப்
போல
தரைக்கு வந்தது

விழுந்து விட்ட உழுந்து
வடையை
நரியும் விழுங்கியது

பிஞ்சு மனதில் நஞ்சு
விதைக்கும்
பள்ளிப் பாடம்

காகம் போல யோகம்
கிட்ட
களவே வழி!

நரியும் செய்த நெறிதான்
இன்று
வாழ்க்கை நெறி

எழுதியவர் : ரூஹுல் ரஸ்மி (17-Apr-14, 12:52 pm)
பார்வை : 156

மேலே