வானத்தை நிமிர்ந்து பார்த்தேன்

வானத்தை நிமிர்ந்து பார்த்தேன்
நீலத்தில் நிர்மலமாய் விரிந்திருந்தது
நிலவு வரக் காத்திருந்தது

பூமியைக் குனிந்து பார்த்தேன்
முகில் வரக் காத்திருந்தது
முகில் நீராகி ஆறாகிப் பெருகி வரக் காத்திருந்தது

இலை அசையவில்லை கொடி அசையவில்லை மொட்டுக்கள் மலரவில்லை
தென்றல் இன்று வருமா என்று காத்திருந்தது
தோட்டத்தின் வாட்டத்தை போக்குமா என்று பார்த்திருந்து

வானத்தை அல்ல நிலவை அல்ல பூமியை அல்ல
கொடியபோல் அசைந்து தென்றலாய் நீ
வரும் வழியைப் பார்த்து காத்திருந்தேன் நான்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Dec-24, 6:59 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 5

மேலே