தோற்றுப் போகும் நான்

புழுத்துப் போன என் எழுத்துப் பார்த்து சமாதானப்படுத்த கவிதை என்று கதைப்பவருக்கு நன்றி. உமிழ் என்றதும் தமிழ் கொட்ட ஒன்றும் நான் பாரதிப் பேத்தியில்லை. கமழ் என்றதும் தமிழ் மணக்க வள்ளுவன் வாத்தியுமில்லை.

போதாமைப் பண்புள்ள நேரம், எனக்கு மட்டும் சில வேளை போதும் என்று சலிக்கிறது. சலிப்பில் ஒலிக்கும் குறட்டைச் சத்தங்கள் தவறி சந்தங்களாகி விடுவதுண்டு.
என் சலிப்புத் தட்டல்கள் உங்கள் சல்லடைகளினால் சலித்த போது தட்டுப்படும் கவிதை என் எதேச்சைகள் என்றால் அது மனோ இச்சையல்ல

இதுதான் நீங்கள் போற்றும் என் கவிதை என்றால் நான் தோற்றுப் போனவள் தான்.
என் கொள்ளளவு தெரிந்தும் எள்ளளவு தயக்கமின்றி தட்டிக் கொடுக்கும் உங்கள் ரசிப்புக்கு மத்தியில் நான் தோற்றுப் போனவள் தான்.

எழுதியவர் : மது மதி (7-Jul-14, 1:44 pm)
Tanglish : thotrup pogum naan
பார்வை : 130

மேலே