கார்த்திகைகுமார் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கார்த்திகைகுமார் |
இடம் | : திருநெல்வேலி / சென்னை |
பிறந்த தேதி | : 04-Dec-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 496 |
புள்ளி | : 74 |
தேடலில் தொலைந்து கொண்டிருக்கும் நாளைய பிணம் .....
முடியாத காரியம்தான்
மூக்கின் மீது
மூக்கை வைத்துவிட்டு
முத்தமிடாமல்
திரும்புவது......
அடைமழையொன்றில்
அவளோடு
நனைந்து வந்தேன்.....
குடை இருந்தும்
என்பது
கூடுதல் தகவல்.....
சொல்லாமல்
கொள்ளாமல்
வந்தது மழை....
நீ
முந்தானையைக்
குடையாக்கும்
அழகைக் காண...!!!
புரட்டாசி மாதத்தின் முதல் திங்கள் கிழமையின் காலை நேரம், சோம்பல் முறித்து கண் விழித்த சிவராவின் மூளையை ஏதோ நினைவுகள் குடைந்து வேறு சிந்தனைக்குள் புதைத்தது. சிவரா தான் பிறந்து வளர்ந்த கிராமத்திலிருந்து சென்னைக்கு வேலை செய்ய பயணப்பட்டு ஏழு ஆண்டுகளை கடந்து விட்டது.
இப்போது இவன் விழித்ததும் நினைவுகள் இவனை அழைத்துச் சென்றதும் அதே கிராமத்துக்குத் தான், இதே திங்களுடன் சேர்த்து மூன்று நாட்கள் நடைபெறும் ஊர்க்கோவில் திருவிழா இந்த வருடமும் நடைபெறாமல் போனதன் ஏக்கமே அவன் நினைவுகளுக்கு காரணம்.
இந்த மூன்று தினங்களும் உறவுகளுடனும், நண்பர்களுடனும் இவன் கொண்டாடி மகிழ்ந்த அந்த நாட்கள் தி
கற்பு என்பது உடல் சம்மந்தப்பட்டதா?உளம் சம்மந்தப்பட்டதா?
பலாத்காரமாக ஒரு பெண் கெடுக்கப்பட்டால் அவளது கற்பு சூரையாடப்பட்டுவிட்டது என்கின்றனர்.கற்பை இழந்தவள் என்றும் சமூகத்தில் அவளுக்கு பெயர் சூட்டிவிடுகின்றனர்.
உண்மையில் கற்பு என்றால் என்ன?
நட்பு நுகர்தல் நானிலத்தில்
நுண்ணிய நூர்த்தல் எனக் கண்டேன்
எப்படி புகுதல்
எப்படி நகர்தல்
எதில் நிலைத்தல் - இதை
நயந்து சொல்ல நான் வந்தேன்
கண்ணியமும் மெய்த்தலும் கலந்து
பற்றுதலும் பிரியமும் பிரியாமல்
எந்த வினையும் பிரிவினை பண்ணாமல்
எண்ணாமல் எதுவொன்றும் செய்யாமல்
ஊக்கமுடன் உணர்ந்ததை உரையாடி
உள்ளம் கள்ளமின்றி
உள்ளொன்றும் புறமொன்றும் தருவதின்றி
உள்ளதை உள்ளபடி திறந்து காட்டி
சிறந்ததை ஈந்திடு
கசந்ததை மறந்திடு
தோள் கொடுக்க விரைந்திடு
கேளாமல் தேடாமல் கையில் சேர்ந்திடு
இறுதிவரை இருந்திட
இருக்க நிலை இருந்து இறங்கிவர
எப்போதும் இணங்கிடு
இப்படியெல்லாம் இருத்தலே
அனாதையின் அர்த்த ராத்திரிகள்,,,,
(இக்கதையில் இடம் பெற்ற கதாபாத்திரங்களின் பெயர் மற்றும் இடங்கள் எல்லாம் மாற்றப்பட்டுள்ளது)
நாள்,,,11 - செப்டம்பர் 2012
எப்போவும் போல இன்னைக்கும்,,,,படுக்கையில் போய் விழுந்த கணம்,,
லேசான உறக்கத்தின் நடுவில் கனமான எதோ நினைக்காமல் விட்டிருந்த
நினைவு தூறல்கள்,,,,
உறக்கம் வர மறுத்தது,,,,போர்வையை விலக்கி எழுந்தவன்,,,நிசப்த
வேளையில் உறங்க மறந்திருக்கும் கடிகார முட்களின் சப்தம் கேட்டு
மணித்துளிகளை,,,நோக்கியபொழுது,,,,,மணி நள்ளிரவு 12:30
ஒரு சிகரட்டை பாக்கெட்டிலிருந்து எடுத்து பற்ற வைத்தவன்
தீக்குச்சி உரசிய பெட்டியின் காயம் போல்,,,,எதோ உள்ளூர யோசனை
நண்பர்கள் (41)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

கவியமுதன்
சென்னை (கோடம்பாக்கம் )

கவிதா காளிதாசன்
கல்பாக்கம்

kavik kadhalan
thiruppur
