ஜெ.பாண்டியராஜ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஜெ.பாண்டியராஜ் |
இடம் | : கீழப்பாவூர் |
பிறந்த தேதி | : 24-Dec-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 708 |
புள்ளி | : 617 |
தமிழ் கூறும் நல்லுலகில் பிறந்தது எனது பெருமையானாலும்.
தமிழை சிறக்கச் செய்வது என் கடமையாகும்.
எனது வலைப்பதிவை காண சொடுக்குங்கள்..
http://pandianinpakkangal.blogspot.com
https://twitter.com/pandianslj
கவிதைத் தொகுப்பின் மூன்றாவது கவிதையை வாசிக்கும் போது புத்தகம் மெல்லிய நடுக்கத்திலிருந்தது கைகளின் உதவியோடு. இதேபோலத்தான் முகநூலின் பதிவுகளை வாசித்தும் வாசிக்காமலும் கடந்து போகும் போது ஒரு படபடப்பு ஏற்படும். ஏன் ஏற்படுகிறது, வாசிப்பு என்பது இல்லாமல் நேரத்தை விரயமாக்கிக்கொண்டு நகர்ந்து போவதனால். கவிதை வாசிக்கப்படுகிறதே பிறகு ஏன் நடுக்கம்? கவிதை என்பது மனஓட்டங்களால் கட்டி இறுக்கப்பட்ட எதுவோ ஒன்று, எதுவிமில்லாமல் இருப்பவனிடம் வெயிலை முற்றிலும் இழந்துவிட்ட மாலைப்பொழுதின் நிறம் ஏற்படுத்தும் படபடப்பு. இனி இப்படி இருப்பது தவிர்க்கமுடியாத சிலவற்றை ஏற்கும் சூழலை உருவாக்குமென்ற எண்ணம் எழுந்ததால். வெளியே
கௌரவப் பிச்சைக்காரர்கள்!!! - விஜயலக்ஷ்மி சுஷில்குமார்
அழகை ரசிக்கும் மனநிலையில் இல்லாமல் பரபரப்பை தனதாக்கிக்கொண்டு ஓடும் காலை நேரம். ஆண், பெண் என்ற பேதமோ, இரவு பகல் என்ற சிந்தனையோ இல்லாமல் மக்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
இவர்களின் ஓட்டத்திற்குத் துணையாகச் சென்னை முதல் காஞ்சிபுரம் வரை செல்லும் ரயிலில் எப்பொழுதும் போல் நானும் அடித்துப் பிடித்துக்கொண்டு ஏறிவிட்டேன்.
தினமும் ஒரே ரயிலில்பயணிப்பதும் ஒரு சுகம், வீட்டிலும், வெளியிலும் வேலைச் செய்துவிட்டு அரக்கப்பறக்க ஓடிவந்து ஏறிவிட்டால் ஜன்னலில் இருந்து வந்து மோதும் காற்று மனதைக் குளிர்வித்து, சோர்வைப் போக்கி உற்சாக மனநிலைக்குக் கொண
என் கனவிற்கு முழு
பலமில்ல இடமொன்றில்
நான் கருவாக
முளைத்திருந்தேன்
கொஞ்சம் வளர்ந்து
காணாமல் போன
மாதத்தின் அந்த மூன்று நாட்கள்
என் தாயின் தவத்திற்கு வரம் கொடுத்தன
தனக்கான கோட்டையை
தாண்டி சென்ற சிங்கங்கள்
இதுவரை உணரா உணர்வை
அச்சமென பெயர் சூட்டிக்கொண்டு
முகவரி அறியா தேசம்
முன்பின் போடா வேசம்
பெற்றெடுத்த பிள்ளையெனும் பாசம்
அதில் வேகமாய் வளர்ந்தது என் கனவு நேசம்
அவர்களின் இரவுப் பொழுதின்
முகப்பூச்சி சாயத்தில்
மறைந்தே கிடந்தன
பகல் பொழுதின் பெரும் இன்னல்கள்
எதையும் உணரா
என் மணல் மதியில்
கனவு கொஞ்சம் கானலாகி
பாசத்தில் பணமரத்தினை கண்டெடுத்தது
என்
நாஞ்சில் நாடனின் மிதவை நாவல் வாசித்துக் கொண்டிருக்கிறேன். நாலரை வருடம் மும்பையில் கரைந்துபோன நினைவுகளை தூசு தட்டுகிறது.
அண்டா புர்ஜி
உசல் பாவ்
வடா பாவ்
சமோசா பாவ்
ரைஸ் ப்ளேட்
இனிப்பு சாம்பார்
மைசூர் டோசா
மழை பெய்யத் தொடங்கியது
தூரலில் ஆரம்பித்து
துரத்தி அடித்தது...
இன்றைய உணவு
மீந்து போகுமென்ற உறுதியில்
நாளைய முதலீட்டின் கேள்விக்குறி
ஞாபகத்திற்கு வந்தது
தள்ளுவண்டி இட்லிக் கடை பாட்டிக்கு...
குஞ்சுகள் நனைவதை தடுக்க
வழியில்லாததைக் கண்டு
வயிற்றில் அடித்துக் கொண்டது இறக்கைகளால்
குடைப் பிடிக்கத் தெரியாத குருவிகள்...
அறுவடைக்கு தயாரான பயிர்களெல்லாம்
அப்படியே மூழ்கிப் போயின
வட்டிக்கு வாங்கிய
விவசாயிகளின் கடன்களைப் போலவே...
கூட்டி அள்ளுவதற்குள்
கரைந்து விட்டது
கடலோரத்தில் உற்பத்தி செய்த உப்பு..
'கல் உப்பு' என்று பெயர் வைத்தால் மட்டும்
கரையாமல் இருக்குமா என்ன?
எவ்வள
பாக்களிலிலே ரதியாகிப்
பிறந்தவளே மகளே...
பூக்களெலாம் தோற்கடித்துப்
பூத்தவளே மகளே...!
................... நீ ...................
பூ விரலால் பூமி தொட்டுத்
தவழ்ந்து வரும் போதும் – உன்
பொன் முகத்தால் நீ மலர்ந்து
புன்னகைக்கும் போதும்...
அன்பென்ற ஆறு பூத்து
அள்ளுதடி வெள்ளம் – என்
ஐம்புலனும் ஈறு தாண்டித்
தின்னுதடி வெல்லம் !
==
கீச்சு மொழிப் பேச்செடுத்துக்
கிறங்க வைக்கும் போதும்...
ஈச்சம் பழம் கொட்டுவதாய்
எச்சில் சொட்டும் போதும்...
மின்மினிகள் நெஞ்சுக்குள்ளே
நிரந்தரமாய் தங்கும் – என்
கண்மணியாள் கதைப் படித்தே
காலத்தினைத் தள்ளும் !
==
பஞ்சு விரல் நெஞ்சில் ஏறிக்
மலையகம் புதைந்தது...
எங்களுக்கென்ன...
மூலைச் செய்தியாய்
முந்தானை அவிழ்த்த கதை....
பெட்டிச் செய்திகளாய்
தாலியறுத்த கதை..
தலைப்புச் செய்தியாய்
ஊர்கூடிக் கொள்ளையிட்ட கதை...
கிரிக்கெட்டில் சல்லாபம்
காவித்துணியில் களவாணி
இன்னும்... இன்னபிறவும்
திகட்டத் திகட்ட
கிடக்கிறது....
இன்னும் உச்சமாய்
உடையிலெது சிறப்பு...?
உயிர்த் தேவையான விவாதம்...
எந்தப் பேனாவும்
எழுதவில்லை... எல்லாக்
காணொளியும் குருடாகி
இருக்கிறது...
மலையகம்
புதைந்து விட்டது..........
இங்க (...)
ரவி தனது கைபேசியில் இணையத்தை முடுக்கிவிட்டு பேரூந்து நிறுத்தத்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தவன், வாகனங்கள் ஒலியெழுப்பிக் கொண்டு முன்னேற முடியாமல் வாகனநெரிசலில் இரைந்து கொண்டிருந்த கணத்தில் இடையில் புகுந்து சாலையின் எதிர்பக்கத்தை அடைந்திருந்தபோது கைபேசியின் வாட்சப் மென்பொருளில் நண்பர்கள் சில தகவல்களை பகிர்ந்திருந்தார்கள்.
குறுஞ்செய்திகளை தன் இடது கை பெருவிரலால் விலக்கியவன், கூகுள் நிலப்படத்தை அழுத்தினான், அது இவன் நின்றுகொண்டிருப்பது வடபழனி நோக்கி செல்லும் ஆற்காடு சாலை என ஆங்கிலத்தில் காண்பித்ததோடு, அதனை அடையாளப்படுத்தும் விதமாக வான்நீல நிறத்தில் பளபளத்த அந்த பொட்டு வடிவம் குழலிய
நெடு நாட்களாக
எதிர்பார்த்திருந்த பிற்பகல் வேளை
கரு மேகங்களுக்கும்
கருப்பை வெறுக்கும் வெண்மேகத்திற்கும்
இடையே உருவங்களைத் தேடி
தொலைந்து கொண்டிருந்தேன்
இல்லை
சிதறிப் போயிருந்தேன்
பருவம் வந்த
பசுவொன்று வெண்மேகத்திரளில்
ஒளிந்து கொண்டிருந்தது...
யார்மீதோ
அதீத கோபத்தில்
குதிரையொன்று கருமேக
உருவத்தில் பாய்ச்சலுக்கு
தயாரானது...
இப்படி
உருவங்களைத் தேடி கிறுக்கு
பிடித்தவன் போல்
கண்களை மேய விட்டிருக்கிறேன்..
சிந்திய தண்ணீரில்
மானையும் மயிலையும்
உள்ளங்கையில்
குழைத்து வாய்த்த சீயக்காயில்
மணல் மேட்டையும்
பிய்ந்துபோன
சுண்ணாம்பு பட்டைச் சுவரில்
தெரியும் உருவத்தை
நான மொழிப் பாடங்களில் 100க்கு 100 மார்க் வாங்கினது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு பாட்டி .
இருக்காதா? தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் 100க்கு 100 மதிப்பெண் வாங்கறது சாதாரண விஷ்யமா? நான் அந்தக் காலத்திலெ 35% வாங்கறதுக்கே தெணறிப் போயிட்டேன்.
நான் 100க்கு 100 எனக்கு கெடச்சதப்பத்தி தான் பெருமைப்படறேன். என் தெறமயப்பத்தி அல்ல.
அட, நீ வேற புரிஞ்சுக்காம பேசற பாட்டி. மனப்பாடம் பண்ணி தப்பில்லாம எழுதினேன். 100க்கு 100 போட்டாங்க. சொந்தமா 2 பக்கக் கட்டுரை ஒண்ணக் கூட இலக்கணப் பிழை இல்லாம எழுத முடியாது. நீ என்னவி ட நல்லா எழுதற பாட்டி.
..........?