s.m.aanand - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  s.m.aanand
இடம்:  kovai
பிறந்த தேதி :  02-May-1969
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Jul-2011
பார்த்தவர்கள்:  1875
புள்ளி:  902

என்னைப் பற்றி...

கவிதை மிகப் பிடிக்கும்!பல நேரங்களில் படிக்கவும்,சில நேரங்களில் எழுதவும் பிடிக்கும்! நான் ஒரு அறிவியல் முதுகலை ஆசிரியன்!

என் படைப்புகள்
s.m.aanand செய்திகள்
s.m.aanand - sarabass அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jun-2016 4:59 pm

காவியத்தில் கண்ணதாசன் கருத்தோங்கும் வண்ணதாசன்
பாவியற்றும் பாவலன்பார் பாரினிலே அற்புதம்பார் .
காவியங்கள் படைத்திடவே காசினியில் தோன்றிட்டான்.
சேவித்தும் ஏற்றிடுவோம் செம்மைமிகுப் பாக்களினை.


அற்புதமான படைப்பாளி அகிலத்திற்கோர் சான்றாகிப்
பொற்புடையக் கவிதைகளால் பொன்றாத இடந்தன்னைக்
கற்றவர்கள் சபைதனிலே காலமெல்லாம் இடம்பெறவே
உற்றவர்கள் முன்னிலையில் உன்னதமாய் நின்றிடுவான் .


கண்ணதாசன் பாடல்கள் காலத்தை வென்றுவிடும் .
விண்ணுலகும் இவன்புகழை விதந்தோதி வாழ்த்துரைக்கும் .
மண்ணுலகில் பிறந்தாலும் மகேசனாம் எந்நாளும்
பண்ணதனில் போற்றிடுவோம் பக்குவத்தின்

மேலும்

அற்புதக் கவிஞன் பற்றிய அழகுக் கவிதை.மிக நன்று! 05-Sep-2016 4:01 pm
மிக்க நன்றி 04-Sep-2016 10:09 pm
அவர் வாழ்க்கை ஓர் கஷ்டத்தில் ஓவியம் அதை உணர்த்தும் அவர் வழி காவியம் 26-Jun-2016 5:36 am
s.m.aanand - இராசேந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Aug-2016 4:00 pm

வறட்சியின் தெனாவெட்டு
மழைத்துளி
வரும் வரைதான்...

வந்த பின்னர்
வறட்சியின் மதப்புகள் எல்லாம்
மறைந்தே போய்விடும்...

மண்ணின் மனம்
மகிழ்ச்சியில் இளகி இலேசாகும்..
மண்ணின் மணமோ
நாசித்துவாரங்களை
ஊடுருவும்...!

மண் தாங்க வேர் இறங்கும்.
வேர் துளிர்க்க
தளிர்கள் எல்லாம்
தழைத்து வந்து
தலை துவட்டும்...!

தளிர் செழித்து செடியாகும்
செடி நுனியில்
வண்ணமிகு மென் மொக்குகள்
நாணி நகைத்தபடி
மொட்டவிழ்க்கும்...!.

நகைக்கும் மொக்குகள்
நனைந்திடக்கூடாதென்று
இலைகள் எல்லாம்
அதற்கு
கேடயக் குடைகளாகும்

காற்றின் சலசலப்பில்
இலைக் குடைக்குள்ளிருந்து
எட்டிப்பார்த்து மறைந்தபடி
பூ மொட்டுகள

மேலும்

உண்மைதான் அய்யா. என் நினைவுகள் உயிர் மூச்சு எல்லாவற்றிலும் இயற்கை மட்டுமே. கிராமம் இயற்கையை எல்லா விதத்திலும் காத்து நிற்கிறது என் கட்டுரை பகுதியில் ஒரு இயற்கை தலைப்பில் இதைப்பற்றி நீண்ட கட்டுரை ஒன்றை படைத்திருக்கிறேன் 17-Aug-2016 2:38 pm
நல்ல நயமான கவிதை நண்பா ஒன்று எழுத விரும்புகிறேன் இயற்கை வாழ்வாங்கு வாழ்வாள் இந்த வெய்யம் உள்ளவரை ஆனால் அவள் மடியில் தவழும் செடி,கோடி,மரங்கள், விலங்கினங்கள் மனிதனால் வேதனைக்கு உள்ளாகின்றன அவற்றை காப்பது நமது கடமை 17-Aug-2016 1:56 pm
வாழ்த்துக்கு நன்றி தோழமையே . எங்கள் கிராமத்து வாழ்க்கையில் எப்போதும் இயற்கைக்கு பஞ்சமில்லை தோழரே. 15-Aug-2016 11:14 am
அருமை தோழமையே! 15-Aug-2016 6:30 am
s.m.aanand - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Aug-2016 8:20 am

​பெற்றது இரவென்பதால்
விடியவே இல்லை இன்றும் !
கற்றது நற்பாடமொன்று
பெறாமல் இருப்பின் நல்லதென்று !

போராடினர் பலவிதத்தில்
வாதாடினர் விடுதலைப் பெற்றிட !
மாண்டனர் பல்லாயிரம்
மகிழ்ந்தனர் பலகோடி பெற்றதும் !

வருத்தமுடன் கூறினாலும்
பொருத்தமே என்று புரிந்திடுவீர் !
நல்லவை நடப்பதைவிட
அல்லவை அதிகமென அறிந்திடுவீர் !

எதிர்மறை கவிதையல்ல
நிகழ்கால நிகழ்வுகளின் பாதிப்பே !
நடைமுறை மாறினால்தான்
இறுதிவரை இன்பமுடன் வாழலாம் !

பாடுபட்ட தியாகிகளை வணங்குவோம்
சுதந்திரக் காற்றை சுவாசிப்போம !

பழனி குமார்

மேலும்

உண்மைதான் மிக்க நன்றி 19-Aug-2016 6:16 pm
அறியாமையை ஒழிக்க சுதந்திரம் பெற்றோம் மண்ணில் இன்றும் ஒழிக்க முடிய அவலங்கள் எங்கும் கட்சி அளிக்க பெற்றது வரமா சாபமா என்று மனிதம் சொல்லட்டும் காத்திருப்போம் காலம் விடைத்தர 19-Aug-2016 11:17 am
உண்மைதான் குமரியாரே ... மிக்க நன்றி நண்பரே 15-Aug-2016 9:20 pm
அதுவும் சரிதான் .....மிக்க நன்றி பழனி 15-Aug-2016 9:20 pm
s.m.aanand - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Aug-2016 1:33 pm

கண்களால் உலகை அளந்தவன்
கண்ணீரால் பூக்களில் சிரிக்கிறான்
மண்ணின் மடியில் தவழ்ந்தவன்
மண்ணுக்குள் தூக்கம் கொள்கிறான்

வானத்தின் நிலவை பார்த்தவன்
வானத்தின் பருக்களை எண்ணினான்
கானத்தின் மெட்டை கேட்டவன்
கானகத்தின் சோகத்தை எழுதினான்

கருப்பை முட்டைக்குள் நீந்தியவன்
கருவறை தமிழனென நினைத்தான்
இருளின் மின்மினிகளை பிடித்தவன்
இருளின் மண்புழுவோடு பேசுகிறான்

நதியில் விழுகின்ற மேகத் துளிகள்
நதி வெள்ளம் பாட உனை அழைத்தது
சதியை எழுதுகின்ற இறைவனவன்
மதி மேடையில் மரணம் வைத்தான்

மானை கொன்ற குகைகள் கண்டேன்
பேனை கொண்ட தாகத்தை சொன்னேன்
சாலை எங்கும் குருவிகள் கண்டேன்
கலைக்கு ந

மேலும்

உண்மைதான்..எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞர் இருந்தும் அவர் முந்திக் கொண்டார் நாம் தவணை முடிவை எண்ணி நாளும் காத்திருக்கிறோம்.. 28-Aug-2016 8:23 pm
எழுத்தறிவில்லாத ஒரு கிராமத்து மருத்துவரால் அல்லது பாட்டி வைத்தியத்தால் காப்பாற்றடக் கூடியவரை இழந்துவிட்டோமே. மஞ்சள் காமாலை பற்றி எண்ணத்தில் உள்ள என் பதிவைப் பார்க்கவும். 25-Aug-2016 9:56 pm
நானறிந்த திரைக் கவிஞர்கள்: கண்ணதாசன், வாலி, வைரமுத்து. வைரமுத்துவுக்குப் பிறகு வந்த கவிஞர்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. முத்துக்குமார் ஏராளமான பாடல்களை எழுதியிருக்கிறார் என்பதை மட்டும் அறிவேன். அவர் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்த திரைப்படத் துறையினர் முத்துக்குமார் பற்றி கூறிய தகவல்களை கேட்டு " எளிமையான நல்ல கவிஞர் ஒருவரை தமிழ் இலக்கிய உலகம் இழந்துவிட்டதே" என்று வருத்தப்பட்டேன். பிழையின்றி எழுதத் தெரியாதவர் எல்லாம் தன் பெயருக்கு முன்னால் 'கவிஞர்' என்ற சொல்லைப் பயன்படுத்தும் இந்நாளில் முத்துக்குமார் கவிஞர் என்ற சொல்லைத் தன் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வதை விரும்பியதில்லை என்று கேள்விப்பட்டபோது " இப்படியும் ஒரு கவிஞரா?" என்று ஆச்சரியப்பட்டேன். 25-Aug-2016 9:52 pm
ஆழ்ந்த இரங்கல்கள் ஆத்மாவின் சாந்திக்காகவும் குடும்ப அமைதிக்காவும் பிராத்தனை செய்வோம் 21-Aug-2016 5:51 am
s.m.aanand - புகழ்விழி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2016 1:36 am

தோட்டத்து பூக்கள்
உன்னை
பிடிக்கும் என்றது
பறித்துக் கொண்டாய் !

வீட்டில் இருந்த
கரு மையும்
உன்னை
பிடிக்கும் என்றது
தீட்டிக் கொண்டாய் !

பட்டு வண்ணசீலையும்
உன்னை
பிடிக்கும் என்றது
உடுத்திக் கொண்டாய் !

ஆழியில் இருந்த
முத்து மணியும்
உன்னை
பிடிக்கும் என்றது
அணிந்து கொண்டாய் !

கடைவீதியில் இருந்த
சலங்கை கொலுசும்
உன்னை
பிடிக்கும் என்றது
மாட்டிக் கொண்டாய் !

பித்தன் நானும்
உன்னை
பிடிக்கும் என்றேன்
முறைத்துக் கொண்டாய் !

ஏனடி இந்த
வஞ்சம் - நான்
என்றோ உன்னிடம்
தஞ்சம் !!!

மேலும்

Nandru 27-Jun-2016 6:24 pm
இந்த வஞ்சத்தில் சற்று குளிர்காயும் அவளது நெஞ்சம் அவ்வளவுதான்! சிறந்த வரிகள்! வாழ்த்துக்கள் தோழமையே! 27-Jun-2016 10:10 am
காதலின் வேதியல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Jun-2016 5:41 am
கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த எண்ணத்தை (public) பழனி குமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
31-Oct-2014 7:40 am

கெஞ்சி கேட்கிறேன் தோழர்களே..தயவு செய்து எல்லோரும் இதனைப் பகிருங்கள்...அதிகம் எழுதுவதற்கு நேரமில்லை எனக்கு...எங்களுக்கு எங்களின் மக்களுக்கு இந்த உதவியைச் செய்யுங்கள்......இந்த ஆறுமுகம் தொண்டமான் பதவி விலக வேண்டும்....உலகத்தின் விழிப்புணர்வை எங்கள் பக்கம் திருப்புங்கள்....மேலும்

கட்டாரி அளித்த எண்ணத்தை (public) ஆசை அஜீத் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
31-Oct-2014 10:32 am

மலையகம் புதைந்தது...

எங்களுக்கென்ன...

மூலைச் செய்தியாய்
முந்தானை அவிழ்த்த கதை....

பெட்டிச் செய்திகளாய்
தாலியறுத்த கதை..

தலைப்புச் செய்தியாய்
ஊர்கூடிக் கொள்ளையிட்ட கதை...

கிரிக்கெட்டில் சல்லாபம்
காவித்துணியில் களவாணி

இன்னும்... இன்னபிறவும்
திகட்டத் திகட்ட
கிடக்கிறது....

இன்னும் உச்சமாய்
உடையிலெது சிறப்பு...?
உயிர்த் தேவையான விவாதம்...

எந்தப் பேனாவும்
எழுதவில்லை... எல்லாக்
காணொளியும் குருடாகி
இருக்கிறது...

மலையகம்
புதைந்து விட்டது..........

இங்க (...)

மேலும்

அருமை நன்பரே 11-Nov-2014 12:01 pm
உண்மையில் நினைத்தாலே நெஞ்சம் வலிக்கிறது. இதை என் கருத்தும் பதிய வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. நம் தமிழ் இனம் இன்னும் உணர்வில்லாமல் கிடக்கிறதே எனும் நினைக்கும்போது , இருந்த உணர்வும் குறைந்து விட்டதே என் எண்ணும்போது மிகவும் வருத்தம்தான் . சரவணா உங்கள் எண்ணத்திற்கு தலை வணங்குகிறேன் . தமிழன் என்ற முறையில் வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் .... 11-Nov-2014 7:13 am
செருப்பால் அடித்தாலும் வாங்கிக் கொண்டு நட்புப் பாராட்டும் வெட்கம் கெட்ட வீணர்களிடம் அல்லவா சிக்கிக் கொண்டிருக்கிறோம்! இதில் காங்கிரெஸ் என்ன ?காவி என்ன? காரி உமிழ்ந்தாலும் ,காலணியால் அடித்தாலும் சுரணையா வந்து விடப் போகிறது? 11-Nov-2014 4:46 am
மன்னிக்கவும் தமிழகத்தில் உண்மையான தமிழன் எவனும் இல்லையோ ( நமையும் சேர்த்தே ) என்றே தோன்றுகிறது . சில நேரங்களில் தமிழன் என சொல்லவே வெட்கமாக இருக்கிறது ... என்னை நானே காரி உமிந்து கொள்வதைத் தவிர வேறன்ன செய்ய ? 08-Nov-2014 9:06 pm
s.m.aanand - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2014 6:52 am

அன்பு நண்பர்களே! தினமும் கைபேசி உபயோகிப்பவர்தனே நீங்கள்? அப்படியெனில் தயவு செய்து உங்கள் கைபேசி எண்களை நான் சொல்லும்படி மாற்றி அமையுங்கள்!
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் எண்களைப் பதியும்போது ,அவர்கள் உங்களுக்கு என்ன உறவோ அவற்றையும் சேர்த்துப் பதியவும்.நெருங்கிய நண்பர்களின் எண்கள் எனில் ,நண்பன்,தோழி போன்ற வார்த்தைகளை இணைத்துப் பதியவும்.இது பல ஆபத்தான தருணங்களில் உங்களுக்கு உதவும்.
இதை ஏன் நான் இப்போது கூறுகிறேன் என்றுதானே எண்ணுகிறீர்கள்? கடந்தவாரம் என் அலுவல் காரணமாக என் மகிழ்வுந்தில் சென்று கொண்டிருந்தேன்.அப்போது எனக்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் செ

மேலும்

வணக்கம் தம்பி ...நலமா..நான் நலம்..! நண்பர்கள் நலமா? தமிழ் புத்தாண்டு 2046 & பொங்கல் நல்வாழ்த்துக்கள்; 15-Jan-2015 1:01 pm
வருகைக்கும் கருத்துபதிவுக்கும் நன்றிகள்! 24-Aug-2014 2:32 pm
வருகைக்கு நன்றி தோழமையே! 24-Aug-2014 2:31 pm
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றிகள்! 24-Aug-2014 2:30 pm
s.m.aanand - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jul-2014 5:10 am

பொருளீட்டும் முயற்சியில்
தாமதமாக வீடு வரும்
தந்தையின் வருகைக்காய்க்
காத்திருந்து ,அவரின்
அன்புக்கரங்களால்
ஒரு வாய் சோறு
ஊட்டிக் கொண்ட ஞாபகம்!

முகத்தில் சோப்புடன் அவர்
சவரம் செய்து கொள்ளும்போது
அய்யப்ப சாமியைப் போல்
குத்த வைத்து அமர்ந்து கொண்டு
சுத்தமாகும் அவர் முகத்தை
சிரிப்புடன் பார்த்த ஞாபகம்!

பெரியவனாகி விட்டால் எனக்கு
என்ன செய்வாய் ராஜா? என
எதிர்பார்ப்புடன் கேட்டபோது ,
சிவப்புக் கார் வாங்கி
சிவப்புத் தொப்பியுடன்
அழைத்துச் செல்வேன் அப்பா! என்ற
என் மழலைச் சொல்கேட்டு அவர்
மனம் மகிழ்ந்து சிரித்த ஞாபகம்!

ஒவ்வொரு நிகழ்விலும் எனக்கு
ஒரு பாடமாக விளங்கியவ

மேலும்

கண்டிப்பாக தோழரே 12-Jul-2014 8:16 am
உண்மைதான் தோழரே!நம் ஒவ்வொரு சொல்லிலும்,செயலிலும் நம்மை அறியாமல் பெற்றோர்களின் செயல்கள் கலந்திருப்பது உண்மை!அதனால்தான் நம்மால் இழப்புக்களைத் தாங்க முடிவதில்லை. 10-Jul-2014 2:44 pm
வருகைக்கு நன்ற தோழரே! 10-Jul-2014 2:40 pm
அருமை 10-Jul-2014 2:34 pm
s.m.aanand - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2014 11:03 pm

வீட்டு வேலை முடிந்து இப்போதுதான் வீட்டுக்கு வந்தாள் தனலட்சுமி.கையில்தான் லட்சுமி இல்லை.மகளின் பெயரிலாவது இருக்கட்டுமே என்று அவள் அப்பா வைத்த பெயர்.ஆயிரம் கஷ்டங்களுக்கு மத்தியில் அவளை ஆறுமுகத்துக்குக் கட்டிவைத்தனர்.
ஆறுமுகமும் கடும் உழைப்பாளிதான்.ஒரு பவுண்டரியில் தினமும் நானூறு ரூபாய் சம்பளம் வாங்குபவன்.மனைவியுடன் மிகவும் அன்பாகவே இருந்து வந்தான். விற்கிற விலை வாசியில் ,வீட்டு வாடகையிலிருந்து,மளிகைப் பொருட்கள் வரை வாங்க அவன் ஒருவனது சம்பளம் பத்தாத காரணத்தால் அவளும் ஒரு செட்டியார் வீட்டில் வீட்டுவேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள் தனா.

செட்டியாரம்மா மிகவும் கஞ்சத்தனம் உடையவள்.காலை எட்

மேலும்

வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றிகள் தோழரே! 17-Mar-2014 11:04 pm
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் தங்க பாண்டி அவர்களே! 17-Mar-2014 11:03 pm
அருமை. 24-Feb-2014 1:33 pm
சிறந்த பதிவு தோழரே . 22-Feb-2014 11:45 pm
s.m.aanand - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2014 10:03 pm

அன்போடு சொன்னார்!
ஆர்வத்தோடு சொன்னார்!
இன்முகத்தோடு சொன்னார்!
இயற்கை விவசாயம் பற்றி!

சட்டை இல்லாத உடம்புடன்
சாட்டையடிப் பேச்சுடன்
உறவாடும் நெஞ்சத்துடன்
உணர்ச்சி பொங்கச் சொன்னார்!

இயற்கை உரங்களால்
விளையும் நன்மைகள்
செயற்கை உரங்கள்
செய்த தீமைகள்!

வளமை இழந்த
வயல்கள் பற்றி
கெட்டுப் போன
நீர்நிலை பற்றி!

மரங்கள்,மனிதர்கள்,
மாடுகள் பற்றி
இயற்கையோடிணைந்த
வாழ்வியல் பற்றி !

சமூக வாழ்வின்
சந்தோசம் பற்றி !
அரசியல் வாதிகளின்
சுயநலம் பற்றி!

அறிவுரை கூறும்
ஆசானாக,
அருகினில் இருக்கும்
அப்பாவாக !

குழந்தைகளுக்குத்
தாத்தாவாக!
விவசாயிகளுக்கு
நண்பராக!

மேலும்

வரவிற்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி மலர்! 13-Jun-2014 7:51 am
எளிய மாமனிதர். அவர் மறைவு நமக்குப் பேரிழப்பு. அவர் சேவையை, வாழ்க்கையைக் கவியாக்கியவிதம் அருமை நண்பரே 12-Jun-2014 7:02 pm
நன்றி வினோத்! நலம்தானே! 25-Jan-2014 7:05 am
மண்ணுலக மானுடர்கள் கேட்காத காரணத்தால் விவசாயம் செய்ய விண்ணுலகம் போனாரோ? மிக மிக அருமை அண்ணா ! 17-Jan-2014 1:28 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (86)

சரவணா

சரவணா

தமிழ்நாடு
பழனிச்சாமி

பழனிச்சாமி

இராமநாதபுரம்
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
Jegan

Jegan

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (86)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
Jegan

Jegan

திருநெல்வேலி
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)

இவரை பின்தொடர்பவர்கள் (86)

priyamudanpraba

priyamudanpraba

singapore
Raj Kumar

Raj Kumar

சௌதி அரேபியா
மேலே