சுதந்திரம்

​பெற்றது இரவென்பதால்
விடியவே இல்லை இன்றும் !
கற்றது நற்பாடமொன்று
பெறாமல் இருப்பின் நல்லதென்று !

போராடினர் பலவிதத்தில்
வாதாடினர் விடுதலைப் பெற்றிட !
மாண்டனர் பல்லாயிரம்
மகிழ்ந்தனர் பலகோடி பெற்றதும் !

வருத்தமுடன் கூறினாலும்
பொருத்தமே என்று புரிந்திடுவீர் !
நல்லவை நடப்பதைவிட
அல்லவை அதிகமென அறிந்திடுவீர் !

எதிர்மறை கவிதையல்ல
நிகழ்கால நிகழ்வுகளின் பாதிப்பே !
நடைமுறை மாறினால்தான்
இறுதிவரை இன்பமுடன் வாழலாம் !

பாடுபட்ட தியாகிகளை வணங்குவோம்
சுதந்திரக் காற்றை சுவாசிப்போம !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (14-Aug-16, 8:20 am)
பார்வை : 1846

மேலே