கிடைக்காத சுதந்திரம்

எல்லையிலா மகிழ்ச்சியே
கிடைத்திட்ட சுதந்திரத்தால் நமக்கு !
ஆனாலும் கவலையெனக்கு
கிடைத்திடா சுதந்திரம் சமூகத்தில் !
சாதிமத வெறியிலிருந்து
விடுபடா சமுதாயம் இன்றுவரை !
உள்ளங்களைப் பிரித்திடும்
பயனற்ற சமயக் கோட்பாடுகள் !
இணைந்திடும் காதலர்களை
கொன்றிடும் சாதீய அரக்கர்கள் !
அரசியலை வர்த்தகமாக்கி
கோடிகளை ஈட்டும் கொடூரர்கள் !
அடித்தட்டு மக்களுக்கு
எதிராக நிகழும் கொடுமைகள் !
வறுமைக் கோடென்று
கருமையால் உருவான அகழிகள் !
அத்தனையும் நீங்கா சமுதாயமெனில்
கிடைத்தும் கிடைக்காத சுதந்திரமே !
பழனி குமார்