தூய்மை இந்தியா
தூய்மை இந்தியா...
இந்தியா நம்இந்தியா....
உருவாக்குவோம் தூய்மை இந்தியா
மானிட அழுக்கை கழுவிடவே
பூமியில்ஓடுது கங்கை நதி
நம்தேசத்தின்அழுக்கு தீர்வதற்கு
திரள்வோமே ஒன்றாய் இணைந்தபடி
குப்பைஇல்லாவீடு,தெய்வம்
வந்து தங்கும்கோயில்
சுத்தமில்லையென்றால்,செல்வம்
கூடசாகும்நோயில்!
தோழமை இணைத்து
தோள்களை நிமிர்த்து
தேசத்தை துடைத்து
தூய்மையை நிறுத்து
தீப்பந்தம் எடுத்து
தீமைகள் கொளுத்து
நிம்மதி பெருக்கு
நோய்நொடி அறுத்து...
குப்பைகள்அகற்றி நல்லபடி-புது
இந்திய தேசத்தை கண்டுபிடி
வெள்ளிநிலாவினைதொட்டெடுத்து-நம்
தாய்த்திரு நாட்டிற்க்கு வெள்ளையடி...!
இந்தியா நம்இந்தியா
உருவாக்குவோம் தூய்மை இந்தியா.....