தென்றல் ராம்குமார் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  தென்றல் ராம்குமார்
இடம்:  சிதம்பரம்
பிறந்த தேதி :  16-Nov-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Aug-2016
பார்த்தவர்கள்:  299
புள்ளி:  56

என் படைப்புகள்
தென்றல் ராம்குமார் செய்திகள்
தென்றல் ராம்குமார் - தென்றல் ராம்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2016 12:02 pm

துல்லியமில்லாத தூரத்தில்
நிற்கும் உந்தன்
தோராயணமான அழகை
ரசித்துக்கொண்டிருக்கிறேன்

சருகிலைகள் எழுப்பும் சப்தமாய்
படபடத்துக்கொண்டிருக்கிறது இதயம்
உன்னையே விழிகளால்
விழுங்கிக்கொண்டிருக்கும் என்னை
எதிர்பாராமல் நீ
கவனிக்க நேர்கையில் ....

இப்போதும்
அனிச்சை வினையாகவே தொடர்கிறது இது

கல்லெறிந்தாலும்
கனி பறித்தாலும்
உனக்கானதே என் கிளை!

மேலும்

இனிது இனிது காதல் இனிது... 23-Nov-2016 10:22 am
ஒவ்வொரு அசைவும் காதலில் இனிதே! 22-Nov-2016 5:00 pm
தென்றல் ராம்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Nov-2016 12:02 pm

துல்லியமில்லாத தூரத்தில்
நிற்கும் உந்தன்
தோராயணமான அழகை
ரசித்துக்கொண்டிருக்கிறேன்

சருகிலைகள் எழுப்பும் சப்தமாய்
படபடத்துக்கொண்டிருக்கிறது இதயம்
உன்னையே விழிகளால்
விழுங்கிக்கொண்டிருக்கும் என்னை
எதிர்பாராமல் நீ
கவனிக்க நேர்கையில் ....

இப்போதும்
அனிச்சை வினையாகவே தொடர்கிறது இது

கல்லெறிந்தாலும்
கனி பறித்தாலும்
உனக்கானதே என் கிளை!

மேலும்

இனிது இனிது காதல் இனிது... 23-Nov-2016 10:22 am
ஒவ்வொரு அசைவும் காதலில் இனிதே! 22-Nov-2016 5:00 pm
தென்றல் ராம்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2016 2:43 pm

கட்டு கட்டா வச்சிருக்கும்
கருப்பு பணக்காரனெல்லாம்
கால்மேல கால்போட்டு -ஏசியில
சில்லுன்னு கூலாதான் இருக்கான்

குருவிப்போல சேத்துவச்சி
பாத்து பாத்து செலவு செய்யும்
பகட்டுக்காரன் மொத்தபேரும்- சில்லரைக்கு
நாக்குதள்ளி எச்சித்தண்ணி குடிக்கான்

முதலைகள பிடிக்க எண்ணி
விரிச்சி வச்ச வலையிலிப்ப
மூஞ்சுறுங்க மாட்டிக்கிச்சி- முழிப்பிதுங்கி
தப்பிச்சா போதுமுனு இருக்கு

கவலையெல்லாம்,இப்ப தினம்
கத்தரிச்சி குப்பையில
கண்டபடி எறியும் பணம்-உதவலையே
நேத்தொரு ஏழைக்குமே வருத்தமாதான் இருக்கு.....

மேலும்

தென்றல் ராம்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2016 4:56 pm

என்று தணியும்
இந்த கொலை வெறி தாகம்???

நகமும் சதையும் போலதான்
கடலும் மணலும்
கலந்த வாழ்வு

கரையில்-
மனைவி,பிள்ளைகளுக்கு
கையசைத்து விடைபெறுகிறோம்
இருதயத்தை கவ்விய கணத்தோடு...

எப்போது வேண்டுமானாலும்
பருந்துகளின் நகங்களால்
எங்கள் சதைகள் கிழிபடலாம்
எல்லையில் தோட்டாக்கள்
ஊடுருவி கசியும் ரத்தத்தில்
.கருஞ்சிவப்பானதுகடல்!!
மறு பரிசீலனை செய்தே
மறுத்துப்போய்விட்டது
அரசாங்க மூளை .......

இங்கே-
நீதிகள் நிராகரிக்கப்பட்டு
நியாயங்கள் தண்டிக்கப்படுகின்றன!
இன்னும்கூட
வட்டமிடுக்கின்றன தலைக்குமேல்
தந்திரக் கழுகுகள்
சட்டங்களாக கரை ஒதுங்கும்
படகுகளினூடே
சில "எலும்புக் கூடுகள்"!

மேலும்

தென்றல் ராம்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Sep-2016 6:23 pm

திடீரென்று
என் பூமியின் வேர்வரை
பள்ளம் பறித்த
பேரதிர்வு...

சற்றுமுன்தான் விழுந்தது

மரணத்தின் விரல்கள்
விளையாட்டாய் பறித்து
வீசி எறிந்துவிட்டு சென்ற
ஒரு மென்மையான பூ..!

பாடலாசிரியர் அண்ணாமலை அவர்களுக்கு
என் கண்ணீர் அஞ்சலி...
அவரோடு நானும் பாடல்கள் எழுதியதில் பெருமைகொள்கிறேன்..

மேலும்

தென்றல் ராம்குமார் - தென்றல் ராம்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Sep-2016 5:12 pm

சத்தமில்லா பெருவெளியில்
இறைச்சியை கொத்தி தின்னும்
கழுகுகளைப்போல்
நச்சரித்துக்கொண்டிருக்கிறது...

திரும்பி வாராத கடன்

தேதி ஐந்துக்குள் குடிக்கூலி

எழுத நினைத்தும்
தொடங்கப்படாத கவிதை

ஒரே பொழுதில்
நூலகத்தையே
படித்து தீர்க்க வேண்டுமென்கிற
பைத்தியக்காரத்தனம்

தொலைபேசி செய்தும்
கொண்டு வரப்படாத தேநீர் ஞாபகம்

அணைந்து கிடைக்கும்
குழல்விளக்குகளை வெறித்தபடி
ஊர்ந்து கடக்கிற பொழுது

இப்படியாக அனைத்தும் ..

மின்சாரமில்லாத வெறுமையில்
ஆழமாகவே
மனதை துளையிட்டு செல்கிறது
தனிமை!

மேலும்

நன்றி நண்பரே 24-Sep-2016 12:04 pm
உண்மைதான்..தனிமையான பொழுதுகள் என்றும் கடந்து சென்ற நினைவுகளை மீட்டிக் கொண்டிருக்கின்றன..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Sep-2016 9:32 am
தென்றல் ராம்குமார் - தென்றல் ராம்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2016 6:48 pm

அழைத்துவரப்பட்டு
அடைக்கப்பட்டது முதல்
விழுந்த முடிச்சுகளின்
மர்மங்கள் அவிழ்க்கப்படுமுன்பே
கோப்புகளுக்குள்
மூடிவைக்கப்படவிருக்கிறது
உயிர்களை காவு கொண்ட
உண்மையும்
அதன் பின்னனியும்!

மேலும்

நன்றி 21-Sep-2016 11:19 am
இதுவே யதார்த்தம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2016 9:32 am
தென்றல் ராம்குமார் - தென்றல் ராம்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2016 9:26 pm

எத்தனை எத்தனையோ....

ஆற்றுப்பாதைகளில்
ஆக்கிரமித்து
மண்டிக்கிடக்கிறது கட்டிடங்களும்,
குடிசைகளை பிரித்தெறிகிற வலிமையான கரங்களின் நிழல்படாமல்..
எதிர்த்து கேட்கும் வாயில்
விழுந்துகொண்டேயிருக்கிறது
இரக்கமற்ற அடி!

மேலும்

உண்மைதான் சார்.. 13-Sep-2016 5:14 pm
உண்மை நிலை உணர்வு 13-Sep-2016 12:21 pm
சிலரின் அதிகாரம் பலரின் அழிவு 31-Aug-2016 9:01 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

ஜி வி விஜய்

ஜி வி விஜய்

பரமக்குடி
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

பழனி குமார்

பழனி குமார்

சென்னை
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே