சட்டங்களும் சில எலும்புக்கூடுகளும்

என்று தணியும்
இந்த கொலை வெறி தாகம்???
நகமும் சதையும் போலதான்
கடலும் மணலும்
கலந்த வாழ்வு
கரையில்-
மனைவி,பிள்ளைகளுக்கு
கையசைத்து விடைபெறுகிறோம்
இருதயத்தை கவ்விய கணத்தோடு...
எப்போது வேண்டுமானாலும்
பருந்துகளின் நகங்களால்
எங்கள் சதைகள் கிழிபடலாம்
எல்லையில் தோட்டாக்கள்
ஊடுருவி கசியும் ரத்தத்தில்
.கருஞ்சிவப்பானதுகடல்!!
மறு பரிசீலனை செய்தே
மறுத்துப்போய்விட்டது
அரசாங்க மூளை .......
இங்கே-
நீதிகள் நிராகரிக்கப்பட்டு
நியாயங்கள் தண்டிக்கப்படுகின்றன!
இன்னும்கூட
வட்டமிடுக்கின்றன தலைக்குமேல்
தந்திரக் கழுகுகள்
சட்டங்களாக கரை ஒதுங்கும்
படகுகளினூடே
சில "எலும்புக் கூடுகள்"!