கானல்
கானல்
சுயநலமும் பெருத்தாச்சு
தன் குடும்பம் என்றாச்சு
விஞ்ஞானம் வளந்தாச்சு
விளைநிலமும் பாழாச்சு
வெட்டி வெட்டி போட்டாச்சு
வெயிலுக்கும் வேத்தாச்சு
கூடுகட்ட குயிலுமில்ல
மாடு மேய நிலமுமில்ல
காடுகர தேஞ்சாச்சு
பல இனங்கள் அழிஞ்சாச்சு
கட்டங்கட்டி வெதச்சாச்சு
பாத்திகட்டி பாத்தாச்சு
ஆவணில பேஞ்ச மழை
தேக்கிவக்க குளமுமில்ல
வெந்த நிலம் வெடுச்சாச்சு
வெதச்ச வயிறும் காஞ்சாச்சு
காலமும் கடந்தாச்சு
காலனும் வந்தாச்சு
வெதச்சவனும் மாண்டாச்சு
கூடி குடும்பம் அழுதாச்சு
விளைநிலமும் வித்தாச்சு
கூலி தேடி போயாச்சு
பசியாற பணமாச்சு
நல்வாழ்வும் கிடைச்சாச்சு...
இவண்,
ஸ்ரீராம் பழனிசாமி